புளியை பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன? #India Dates





புளியை பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன? #India Dates

0

அறுசுவைகளில் ஒன்று புளிப்புச்சுவை. இதை சரியான அளவில் நமக்கு கொடுக்கும் ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற புளி. 

புளியை பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன?
சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும் இதில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புளியில் கால்சியம், வைட்டமின் "பி' நிறைந்துள்ளது. 

பெரிய மார்பகத்துடன் கவர்ச்சியாக இல்லை.. ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனைகள் உருக்கம் !

தவிர பாஸ்பரஸ், இரும்பு போன்றவைகளும் உண்டு. உணவில் மணம், சுவை ஊட்டவும் புளி பயன்படுகிறது. புளி தென்னிந்தியாவின் ஆதார உணவு குழம்பு, ரசம், சாம்பார், புளிக் குழம்பு, புளியோதரை, சட்னி வகைகள். 

புளியால் ஆன "பச்சி புளுஸ்'' பிரசித்தம். போன்ற வகைகளை வைத்து பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. புளி பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் அதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு. அவற்றைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

​உணவில் புளியின் முக்கியத்துவம்

​உணவில் புளியின் முக்கியத்துவம்

நம் தென்னிந்திய சமையலைப் பொறுத்த வரை அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருள் புளி. இதுவரை இந்த புளி வெறும் சுவைக்காக மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தோம். 

ஆனால் குழம்பில் சேர்க்கும் புளியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. புளி ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது.

அதிக சிரிப்பு, தூக்கம், பேச்சு, கோபம் ஆபத்தா?

புளி ஒரு ஆன்டி செப்டிக் மருந்தாக செயல்படுகிறது. சருமம் வயதாவதை தடுக்கிறது. இந்த புளிக்கரைசலை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு வந்தாலே ஏகப்பட்ட பிணிகளை ஓட்ட முடியும். 

உணவில் சேர்த்து சாப்பிடும் போது ஏற்படும் புளிப்பு சுவைக்கு எது ஈடு. அந்தளவுக்கு இதன் சுவையும் ஆரோக்கியமும் நம்முடைய ஒட்டியுள்ளது.

​ஆரோக்கிய தரும் புளி

​ஆரோக்கிய தரும் புளி

புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. பிலிப்பைன்ஸில் இலைகள் "டீ'யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுகிறது.

நமக்கு வருகின்ற பெரும்பாலான ஆரோக்கிய கோளாறுகள் நாள்பட்ட அழற்சி, மெட்டா பாலிசம் பாதிப்புகளால் ஏற்படுகிறது. அதைப் போக்க புளி ஒன்றே போதும்.  

புகைத்து தள்ளும் கர்ப்பிணிப் பெண்களே !

இந்தியா, ஆசியா போன்ற வெப்ப மண்டல நாடுகளிலும், துணை வெப்ப மண்டலப் பகுதிகளிலும் இந்த புளிய மரத்தை நீங்கள் காண முடியும். நம் நாட்டில் சாலையின் இரு புறங்களிலும் இந்த மரங்கள் தென்படும். 

ஏன் சிறு வயதில் கூட இதைப் பறித்து விளையாடி இருப்போம். இதன் சிறப்பு அறிந்தே இதை பேரீச்சம்பழத்திற்கு ஈடாக 'இந்தியா டேட்ஸ்' என்று அழைக்கின்றனர்.

இதன் சுவை புளிப்பு. அப்படிப்பட்ட புளியின் நன்மைகள் பற்றியும் அதன் ஊட்டச்சத்து அளவுகள் பற்றியும் கீழே காண்போம்.

தினசரி நீங்கள் 100 கிராம் புளி வரை எடுத்துக் கொள்ளலாம்.

100 கிராம் புளி ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் புளியில் 

பலரின் கவனத்தையும் ஈர்த்த 34 கிலோ மார்பகத்தை கொண்ட செலிபிரிட்டி... சக்சஸ் கதை !

ஊட்டச்சத்து அளவுகள்

எனர்ஜி - 239 கலோரிகள், 

கார்போ ஹைட்ரேட் - 62.5, கிராம்,

நார்ச்சத்து - 57.4 கிராம், 

கொழுப்பு - 0.6 கிராம், 

பூரித கொழுப்பு - 0.272 கிராம்,

மோனோ சாச்சுரேட்டட் - 0.181 கிராம்,

பாலிஅன்சாச்சுரேட்டட் - 0.059 கிராம்.

2.8 கிராம் புரதத்தின் மதிப்பு

ட்ரிப்டோபேன் - 0.018 கிராம், 

லைசீன் - 0.139 கிராம், 

மெதியோனன் - 0.014 கிராம்

வைட்டமின்கள்

ஆயில் புல்லிங் செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும்  !

தையாமின் (பி1) -  - 37% - 0.428 மி.கிராம்,

ரிபோளேவின் ((பி2) - 13% 0.152 மி.கிராம்,

நியாசின் (பி3) - 13% 1.938 மி.கிராம்,

பான்தோதெனிக் ஆசிட் - 3% - 0.143 மி.கிராம்,

வைட்டமின் பி6  -  5%  -  0.066 மி.கிராம்,

கோலின்  -  2%  - 8.6 மி.கிராம்,

வைட்டமின் சி  - 4%  -  3.5 மி.கிராம்,

வைட்டமின் இ -  1% -  0.1 மி.கிராம்,

வைட்டமின் கே -  3% -  2.8 மி.கிராம்,

கால்சியம்  - 7% -  74 மி.கிராம்,

காப்பர்  - 43% -  0.86 மி.கிராம்,

அயர்ன் - 22% -  2.8 மி.கிராம்,

மாக்னீசியம்  - 26% -  92 மி.கிராம்,

பாஸ்பரஸ்  - 16% -  113 மி.கிராம்,

பொட்டாசியம் -  13% -  628 மி.கிராம்,

செலினியம்  - 2%  -  1.3 மி.கிராம்,

சோடியம் -  2% -  28 மி.கிராம்,

ஜின்க்  - 1% -  0.1 மி.கிராம்,

தண்ணீர்  -  31.40 கிராம்,

உடல் எடைக் கட்டுப்பாடு

உடல் எடைக் கட்டுப்பாடு

நமது மெட்டபாலிசம் மெதுவாக செயல்படுவதாலும், தேங்கி இருக்கும் கொழுப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் போவதாலும் நமக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. 

அதற்கு முதலில் நாம் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். அதற்கு ஆரோக்கியமாக ஆற்றல் தரும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 

நீங்கள் கர்ப்ப காலத்தில் எப்படி தூங்குகிறீர்கள்? விழிப்புணர்வு தகவல் ! 

அதற்கு புளி ஒரு சிறந்த உணவு. இது நமது லிப்பிட் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி தேங்கியுள்ள கொழுப்பை பயன்படுத்த உதவி செய்கிறது. 

இதனால் கொழுப்புகள் எரிக்கப்பட்டு எளிதாக எடையை குறைக்க முடிகிறது. கொஞ்சமாக குழம்பில் சேர்க்கும் புளியில் எவ்வளவு நன்மைகள் இருக்கு என்று பார்த்தோம். 

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கை குணப்படுத்துதல்

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கை குணப்படுத்துதல்

நம் கிராமத்து நாட்டுப்புற மருத்துவத்தில் புளியை மலமிளக்கியாக பயன்படுத்துகின்றனர். இந்த மருத்துவ கலாச்சாரம் இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்கா வரை புகழ் பெற்று விளங்குகிறது. 

இடி, மின்னல் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி? விழிப்புணர்வு தகவல் !

புளியில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், டார்டாரிக் அமிலம் போன்றவை நாள்பட்ட மலச்சிக்கலை போக்கி மலம் கழித்தலை இலகுவாக்குகிறது. 

இதுவரை உங்களுக்கு தீராத வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் புளியமரத்து இலையை சாப்பிட்டால் குணமாகி விடும் என்கின்றனர்.

கர்ப்ப காலப் பயன்கள்

கர்ப்ப காலப் பயன்கள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் பெரும்பாலும் காலை நோயால் அவதிப்படுவர். எழுந்ததும் வாந்தி, குமட்டல், அதிகப் பசி இருக்கும். 

இதற்கு புளியை நம் முன்னோர்கள் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே கர்ப்பமான பெண்கள் புளியை சேர்த்துக் கொள்ளும் போது குமட்டல் வாந்தி ஓரளவுக்கு குறையும். 

பி.எஃப். பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய  தகவல்கள் !

மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் மலச்சிக்கல் தொல்லையால் பாதிக்கப்படுவர். அதற்கும் புளி ஒரு மலமிளக்கியாக அமையும். குமட்டலை தடுக்க புளிச்சாற்றை சுவைக்கலாம்.

​அழற்சி எதிர்ப்பு பண்புகள்

​அழற்சி எதிர்ப்பு பண்புகள்

புளி மற்றும் புளிய மரத்து இலைகள் இரண்டுமே அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளது. நாள்பட்ட அழற்சி காரணமாகத் தான் நமக்கு நிறைய நோய்கள் ஏற்படுகின்றன. 

ஊட்டச்சத்து மிகுந்த பார்லி கஞ்சி செய்வது எப்படி? 

எனவே இந்த நாள்பட்ட அழற்சியை போக்க புளிக்கரைசல் அல்லது புளியை பயன்படுத்தி டீ போட்டு அதில் தேன் சேர்த்து தினமும் குடித்த வரலாம். 

நல்ல முன்னேற்றம் தரும். புளியில் டீயா என்று யோசக்காதீங்க. அது மிகவும் ஆரோக்கியமான விஷயமும் கூட. சுவையாகவும் இருக்கும்.

​நல்ல ஆன்டி செப்டிக் மருந்து

​நல்ல ஆன்டி செப்டிக் மருந்து
புளி ஓரு நல்ல கிருமி நாசினியாக செயல்பட்டு ஏராளமான நோய்கள் வரை தடுக்கிறது. அதிலும் வெப்ப மண்டல பகுதிகளில் ஏற்படும் மலேரியா, வைரஸ், பூஞ்சை தொற்றுகள், அஸ்பெர்கிலஸ் நைகர், எஸ்கெரிச்சியா கோலி, 

நாம் உண்பது உண்மையில் ஓட்ஸ் தானா? மறைக்கப்பட்ட உண்மை !

கெல்பிசெல்லா நிமோனியா, சால்மோனெல்லா டைபி போன்ற நோய்த் தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது. 

எனவே நீங்கள் புளியை கிருமி நாசினியாக பயன்படுத்திக் கொள்ளலாம். உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு கூட இந்த புளியை அரைத்துத் தடவினால் வீக்கம் உடனே குறைந்து விடும்.

வயதான தோற்றத்தை தடுக்க

வயதான தோற்றத்தை தடுக்க

உங்கள் சருமம் வயதாகுவதை தடுக்க நிறைய க்ரீம்களை நாடி போவோம். ஆனால் இனி அது தேவையில்லை. இயற்கையாகவே புளி போன்ற பொருட்களில் சருமம் வயதாகுவதை தடுக்கும் தன்மை உள்ளது. 

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு செய்வது எப்படி?

ஏனெனில் புளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் சருமம் வயதாகுவதை தடுக்கிறது. எனவே புளியை பேஸ்ட்டாக்கி உங்கள் முகத்திற்கு பயன்படுத்தி வாருங்கள். 

அப்புறம் உங்க வயசு என்ன என்று எல்லாரும் கேட்பாங்க. புளியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து வெந்நீரில் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். 

உங்களுக்கே உங்களுடைய வயதில் சந்தேகம் வந்து விடும் அளவுக்கு சில வாரங்களிலேயே மாறி விடும்.

​இதய ஆரோக்கியம்

​இதய ஆரோக்கியம்

புளியில் இதய ஆரோக்கியத்தை காக்கும் ப்ளோனாய்டுகள், பாலிபீனால்கள் போன்றவைகள் உள்ளன. 

இவைகள் நம்ம உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்து இதயத்தை காக்கிறது. 

சமைக்காத உணவில் உள்ள நன்மைகள் என்ன? #Raw Foodism !

அதே மாதிரி நோயெதிப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதனால் இதயத்தை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறது. இதயத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலைக் கரைப்பதில் புளி மிக வேகமாக செயலாற்றும்.

​கல்லீரல் பாதுகாப்பு

​கல்லீரல் பாதுகாப்பு

தற்போதைய பாஸ்ட் புட் உணவுப் பழக்கத்தால் நமக்கு முதலில் பாதிக்கும் உறுப்பு இந்த கல்லீரல் தான். இந்த கல்லீரல் தான் உணவில் நச்சுக்களை வெளியேற்றி செரிமான செயலை ஒழுங்காகவும் செயல்பட உதவுகிறது. 

கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு நச்சுக்கள் ஒழுங்காக வெளியேறா விட்டால் என்ன நடக்கும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். உடம்பே பாழாகி விடும். 

எனவே உங்கள் கல்லீரல் நச்சுத்தன்மையை போக்கி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க புளி ஒரு சிறந்த தேர்வு. ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்புகளை கல்லீரலில் இருந்து வெளியேற்றவும் இது உதவுகிறது.

புளியம் பழத்தின் ஓடுகளை நீக்கி விட்டு பழத்தை எடுக்கவும். இதனுடன் தனியா பொடி, 2 கிராம்பூ, 2 ஏலக்காய், சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். 

கஅபாவைச் சுற்றியுள்ள தரை ஏன் குளிர்ச்சியாக உள்ளது?

ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்து வர பித்தத்தை சமன்படுத்தி பசியை தூண்டுகிறது.

​முகப்பருக்கள் நீங்க

முகப்பருக்கள் நீங்க

முகத்தில் பருக்கள் வருவதும் சரும தொற்று அல்லது அழற்சியால் ஏற்படுகிறது. எனவே இந்த மாதிரியான நாள்பட்ட அழற்சியை போக்க புளி சிறந்தது. 

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் !

எனவே உங்க முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் புளிச்சாற்றை தடவலாம். பருக்களுக்கு காரணமான கிருமிகளை அழிக்கக் கூடும்.

பயன்படுத்தும் முறை

புளியை பயன்படுத்தும் முறை

1 டேபிள் ஸ்பூன் புளிக்கரைசல், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை 10 - 15 நிமிடங்கள் முகத்தில் அப்ளே செய்யுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் நீங்கிய பளபளப்பான முகத்தை பெறலாம்..

குறிப்பு

புளியின் மகத்துவம்

புளியின் மகத்துவத்தை பெற வேண்டும் என்றால் அவற்றை சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பால் பொருட்கள், க்ளூட்டன் வகை உணவுகளுடன் சேர்க்க கூடாது. 

அவை அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது ஏனெனில் செலியாக் மற்றும் லாக்டோஸ் அழற்சி இருப்பவர்களிடம் இது வேலை செய்யாது. 

சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?

சத்துக்களை உறிஞ்ச முடியாது. எனவே உங்களுக்கு அலற்சி தரும் பொருட்களுடன் புளியை சேர்த்து சாப்பிடாதீர்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)