இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான உணவுகளில் புரத சத்து அதிகம் உள்ள சோளத்திற்கு முக்கிய பங்குண்டு.
இவற்றில் இருக்கும் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது. இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் காப்பர் சத்துக்கள் உடலுக்கு வேண்டிய புத்துணர்ச்சியை அளிக்கிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய சத்தான வைட்டமின் பி மற்றும் போலேட் போன்றவை அதிகளவில் உள்ளது.
சோளம் மாவாகவும், ரவை போன்ற வடிவிலும் கிடைப்பதால் சோள உப்புமா, சோள ரொட்டி, சோள கேக், சோள லட்டு விதவிதமான உணவு வகைகளும் செய்யலாம்.
தினமும் சோளத்தை உங்கள் உணவில் சேரத்து அதன் பலன்களை பெறுவது அவசியம். தினசரி உணவில் அடிக்கடி சோளம் சேர்த்து கொள்வதால், நீரழிவு நோய்க்கு சிறப்பாக செயல்படுகிறது.
நார்ச்சத்து மற்றும் புரதம் இரண்டும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதனால், பல்வேறு நோய்கள் தடுக்கப் படுகிறது.
மாலை நேரத்தில் சத்து நிறைந்த உணவான சோள ரவை உப்புமாவை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையானவை :
அரிசி ரவை – 1 கப்சோளம் – 1 கப்
கோதுமை ரவை – 1 கப்
பச்சை மிளகாய் – 1
கடுகு – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – சிறிய துண்டு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
கடலைப்பருப்பு – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
முந்திரி – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு
கால்சியம் குறை பாட்டினால் வரக்கூடிய வலிகள் !
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
சோளத்தை ரவையாக உடைத்துக் கொள்ள வேண்டும். அரிசி ரவை, கோதுமை ரவை, சோள ரவை மூன்றையும் ஒன்று சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து, பொடியாக நசுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
கலந்து வைத்திருக்கும் ரவையின் அளவில் 1 பங்குக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும்.
பிறகு உப்பு சேர்த்து, கொதித்ததும் கலந்து வைத்திருக்கும் ரவையைத் தூவிக் கிளறி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும்.
பிடித்தமான காய்கறிகளை சேர்த்தும் சோள ரவை உப்புமா தயாரிக்கலாம். விருப்பப்பட்டவர்கள் சட்னியுடன் சாப்பிடலாம்.