தீபாவளி பண்டிகைக்கு காஜூ ஆப்பிள் செய்வது எப்படி?





தீபாவளி பண்டிகைக்கு காஜூ ஆப்பிள் செய்வது எப்படி?

0

முந்திரி பருப்பை உண்பதற்கான சரியான வழி, இரவு முழுவதும் அதை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் சாப்பிடுவது தான். முந்திரி பருப்பில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

தீபாவளி பண்டிகைக்கு காஜூ ஆப்பிள் செய்வது எப்படி?
மேலும் முந்திரி பருப்பை தொடர்ந்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். முந்திரி பருப்பில் நிறைய வைட்டமின்கள் மற்றும் சுவடு கூறுகள் உள்ளன. 

இது இரத்த நாளங்களை மென்மையாக்குகிறது, இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் இருதய நோய்களைத் தடுக்கிறது.

ஸ்வீட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எனவே இந்த தீபாவளி பண்டிகைக்கு அனைவருக்கும் பிடித்த காஜூ ஆப்பிள் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:-

முந்திரி - ஒரு கப்,

சர்க்கரை - அரை கப்,

தண்ணீர் - கால் கப்,

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்,

மஞ்சள் ஃபுட் கலர் - சில துளிகள்,

சிவப்பு ஃபுட் கலர் - சில துளிகள்,

சிறிய பெயின்ட் பிரஷ் - ஒன்று,

கிராம்பு - தேவையான அளவு.

செய்முறை : .

தீபாவளி பண்டிகைக்கு காஜூ ஆப்பிள் செய்வது எப்படி?
முதலில் முந்திரி பருப்புகளை மிக்சியில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து சலித்து கொள்ளுங்கள்.

ஒரு தெரு முழுவதும் சேலத்து குழம்பு... சுவாரசியமான கதை ! 

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு நன்றாக பாகு காய்ச்சி கொள்ளுங்கள்.

பிறகு அரைத்த முந்திரி பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கை விடாமல் கிளறுங்கள். இவ்வாறு கை விடாமல் கிளறுவதினால் சில நிமிடங்களில் கலவை நன்கு சுருண்டு வரும். 

சிறிதளவு மாவினை கை விரலால் எடுத்து உருட்டிப் பார்த்தால் உருண்டையாக வர வேண்டும். அதுவே சரியான பதமாகும். எனவே சரியான பதம் வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி தட்டில் சிறிதளவு நெய் தடவி மாவினை ஊற்றி பரப்பி ஆற விடுங்கள்.

மாவானது கை பொருந்தும் அளவிற்கு ஆறிய பிறகு கையில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆப்பிள் வடிவத்திற்கு தயார் செய்யுங்கள். பிறகு இந்த உருண்டைகள் மீது சிவப்பு நிற ஃபுட் கலரினை பிரஷ் செய்து சிறிது நேரம் காய வைக்கவும்.

டேஸ்டியான வெஜிடபிள் முட்டை ரோல் செய்வது எப்படி?

இறுதியாக உருண்டையின் நடுவில் சிறிய பள்ளம் பறித்து கிராம்பினை தலைகீழாக சொருகினாள் சுவையான காஜூ ஆப்பிள் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)