சுவைமிக்க மாம்பழ ஃபலூடா செய்வது எப்படி ?





சுவைமிக்க மாம்பழ ஃபலூடா செய்வது எப்படி ?

0

ஃபலூடா (ஆங்: Falooda, Faluda, Faloodah), இந்திய துணைக் கண்டத்தின் பிரபலமான இனிப்பு குளிர்பானமாகும். 

சுவைமிக்க மாம்பழ ஃபலூடா

பாரம்பரியமாக இது ரோஸ் சிரப், சேமியா, திருநீற்றுப் பச்சை (sabza / takmaria) விதைகள் மற்றும் ஜெல்லி துண்டுகளுடன் பால் கலந்து செய்யப்படுகிறது. 

இதன் மேலே ஒரு கரண்டி ஐஸ் கிரீம் வைக்கப்படுகிறது. பலூடா செய்யத் தேவைப்படும் சேமியா ஆனது கோதுமை, கிழங்கு வகை, சோளமாவு, அல்லது ஜவ்வரிசியில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

பழமாக, ஜூஸாக, ஐஸ்கிரீமாக... இன்னும் எப்படிச் சாப்பிட்டாலும் அலுக்காதது மாம்பழம். 

போனா வராது, பொழுது போனால் கிடைக்காது என்கிற மாதிரி இந்த சம்மர் சீஸனை தவற விட்டால் இன்னும் ஒரு வருடத்துக்கு மாம்பழம் சாப்பிட வாய்ப்பு கிடைக்காது. 

எனவே இந்த மாம்பழத்தை கொண்டு மாம்பழ ஃபலூடா செய்வது எப்படி ? என்று இங்கே பார்ப்போம்.

ஜீரண சக்திக்கு வெற்றிலை சாதம் செய்வது எப்படி?

தேவையானவை:

பால் – ஒரு கப் (காய்ச்சாதது)

சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

கண்டெண்ஸ்டு மில்க் – 2 டேபிள் ஸ்பூன்

மாம்பழக்கூழ் – 2 டேபிள் ஸ்பூன்

மாம்பழத் துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன்

மாம்பழ ஐஸ்க்ரீம், வெனிலா ஐஸ்க்ரீம் – தலா 2 டேபிள் ஸ்பூன்

துளசி விதைகள் – ஒரு டீஸ்பூன்

ஜெல்லித் துண்டுகள் – டேபிள் ஸ்பூன் (ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து துண்டுகளாக்கியது)

ஃபலூடா சேமியா – ஒரு டேபிள் ஸ்பூன்

பொடித்த நட்ஸ் வகைகள் – 2 டேபிள் ஸ்பூன்

ரோஸ் சிரப் – ஒரு டேபிள் ஸ்பூன்

ருசியான இன்ஸ்டண்ட் பால் கோவா செய்வது எப்படி?

செய்முறை:

சுவைமிக்க மாம்பழ ஃபலூடா செய்வது எப்படி ?

துளசி விதைகளை அரை கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஃபலூடா சேமியாவை வேக வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் பாலை ஊற்றி, பாதியாகும் வரை சுண்டக் காய்ச்சவும். 
சுவையான எக்லெஸ் மல்டிகிரைன் பால் கேக் செய்வது எப்படி?

இதனுடன் சர்க்கரை சேர்த்து, கரைந்த பின் இறக்கவும். பால் நன்கு ஆறிய பின் ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஊறிய துளசி விதைகளைப் போடவும். 

இதன் மீது ஜெல்லித் துண்டுகள், மாம்பழத் துண்டுகள், கண்டென்ஸ்டு மில்க், பலூடா சேமியா, மாம்பழக்கூழ், குளிர்ந்த பால் என ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். 

வெஜ் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?

இறுதியாக மேலே ஐஸ்க்ரீம் வைத்து, அதன் மீது ரோஸ் சிரப் ஊற்றி, நட்ஸ் வகைகள் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)