அரிசியை விட சிவப்பரிசியை உணவில் அதிகளவு சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. சிகப்பு அரிசியை புட்டு, சத்தம், கஞ்சி, களி போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும். தினமும் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.
சாதாரண அரிசியில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும். இதனை சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் பிரச்சனை இருக்கும் நபர்கள் சாப்பிட கூடாது.
சிவப்பு அரிசியை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இன்று சிவப்பரிசியில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிவப்பரிசி மாவு - 4 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 10 முதல் 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாறவும். சூப்பரான சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு ரெடி. அதனை சன்னாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.