சுவையான வரகு அரிசி கேரட் சாதம் செய்வது எப்படி?





சுவையான வரகு அரிசி கேரட் சாதம் செய்வது எப்படி?

0

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வில் தற்போது உணவில் தான் அதிக மாற்றம் உண்டாகியுள்ளது. அன்றாட உணவில் அரிசி, கோதுமை உணவுகளை தாண்டி சிறு தானியங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

வரகு அரிசி கேரட் சாதம்

சிறுதானியங்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் போன்றவை நிறைந்திருக்கிறது.

வரகு அரிசி சிறுதானியங்களை போன்று சிறிய விதை பகுதிதான். பொதுவாக அரிசி வகைகளை பாலீஷ் செய்யும் போது அதில் இருக்கும் பி- காம்ப்ளஸ் பெருமளவு வெளியேறி விடும். 
அதனால் நமக்கு அரிசியில் இருந்து அதிக அளவு மாவுச்சத்து மட்டுமே கிடைக்கிறது. இந்த மாவுச்சத்துதான் டிரைகிளிசரைடு என்னும் கொழுப்பாக உடலில் மாற்றப்படும் போது ரத்த அடர்த்தி இதயத்தை பாதிக்க செய்கிறது.

மூளை செல்களின் பணிகள் சுறுசுறுப்பாக செயல்படவும், தசைகள், எலும்பு மஜ்ஜை, பல் எனாமல் போன்றவற்றை காக்கவும் இந்த அமினோ அமிலங்களின் பங்கு அவசியம் தேவை. 

அமினோ அமிலங்களில் மொத்தம் 12 -ல் 11 அமினோ அமிலங்கள் வரகில் உள்ளது. உடலுக்கு தேவையான புரதமானது எப்போதும் தானியங்களுடன் பருப்பு வகைகள் சேர்த்து எடுத்து கொள்ளும் போது தான் புரதம் முழுமையாக இருக்கும். 

அந்த புரதம் அமிலத்தன்மையோடு இருக்கும் போது அதில் இருக்கும் நச்சை வெளியேற்ற உடல் வேலைசெய்ய வேண்டும். 

இதிலிருக்கும் சத்து ரத்தம் உறிஞ்சும் பணியை செய்ய அவை காரத்தன்மையாக மாற்றவும் வேண்டும். இந்த பணி உடலுக்கு கூடுதல் சிரமத்தை அளிக்க கூடும்.

சிறு தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசி கேரட் வைத்து கேரட் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாட்டு இறைச்சி உண்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?

தேவையான பொருட்கள் :

கேரட் - 4

உதிரியாக வடித்த வரகு அரிசி சாதம் - 2 கப்

வெங்காயம் - 2

கடுகு - 1 ஸ்பூன்

எண்ணெய் - 6 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

முந்திரி - தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு (வெட்டியது)

செய்முறை :

கேரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் 

அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், உப்பு சேர்த்து வதக்கி மூடி வைத்து வேக விடவும். 

கேரட் நன்றாக வெந்த பின்னர் வேக வைத்த வரகு அரிசியை அதில் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும். 

சத்தான சுவையான வரகு அரிசி கேரட் சாதம் ரெடி. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)