சோயா சங்க்ஸ் பக்கோடா செய்வது எப்படி?





சோயா சங்க்ஸ் பக்கோடா செய்வது எப்படி?

0

சோயாபீன்ஸ் உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய பருப்பு வகைகளில் ஒன்றாகும். மற்ற பருப்பு வகைகளை போலவே எல்லா ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. 

சோயா சங்க்ஸ் பக்கோடா செய்வது எப்படி?

குறிப்பாக புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் இருப்பதால், சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

மத்தவங்க முன்னாடி சும்மா கெத்தா இருக்கணுமா? படிங்க !

சோயா பீன்ஸ் ஆனது சோயா மாவு, சோயா புரதம், டோஃபு, சோயா பால், சோயா சாஸ் மற்றும் சோயாபீன் எண்ணெய் உள்ளிட்ட வகைகளாக உண்ணப்படுகிறது. 

உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக சோயா பீன்ஸினை எடுத்துக் கொள்வது அவசியம். ஆய்வின்படி சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது. 

மேலும் ஆரோக்கியமான எடையை நிர்வகிப்பதோடு, தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது. சோயாபீன்ஸ்களில் காணப்படும் கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. 

புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற ஹார்மோன்களுடன் தொடர்புடைய புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 

புற்றுநோய் உள்ளவர்கள் தங்களது உணவில் சோயாபீன்ஸ்களை தவறாமல் எடுத்துக் கொண்டால், நல்ல பலனைத்தரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புரோட்டீன் சத்து உணவை கண்டபடி சாப்பிடாதீங்க ! 

தேவையானவை : 

சோயா சங்க்ஸ் - ஒரு கப் 

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் 

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் 

கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன் 

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் 

இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன் 

ஓமம், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன் 

பெரிய வெங்காய விழுது - 2 டேபிள் ஸ்பூன் 

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு தண்ணீர் - சிறிதளவு

செய்முறை:

சோயா சங்க்ஸை சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்துப் பிழிந்து எடுக்கவும். தேவையானவற்றில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய், தண்ணீர் தவிர, மற்ற அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலக்கவும். 

கலவை கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கலந்து விடவும். 

வாணலியில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும், மாவை சிறிது சிறிதாகக் கிள்ளி எடுத்து எண்ணெயில் சேர்த்து நன்கு வேக விட்டுப் பொரித்தெடுக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)