தட்டை முறுக்கு தீபாவளி பலகாரங்களில் ஒன்றாகும். தட்டை முறுக்கு: மாலை நேர சிற்றுண்டி கொரிக்க சுவையான இந்த தட்டை முறுக்கு காப்பியுடன் நல்ல பொருத்தமானது.
தேவையான பொருட்கள்:-
பச்சரிசி மாவு - இரண்டு கப்
ஊற வைத்த கடலை பருப்பு - 2 ஸ்பூன்
வெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
பெருங்காய தூள் - இரண்டு ஸ்பூன்
வறுத்து அரைத்த உளுந்து மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு (பொடிதாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உங்கள் காம உணர்வை கட்டுப்படுத்துவது எப்படி?
செய்முறை :
மாவு நன்கு ஆறியதும் அவற்றில் வறுத்து அரைத்த உளுந்து மாவு ஒரு டேபிள் ஸ்பூன், பொடிதாக நறுக்கிய கருவேப்பிலை சிறிதளவு,
பெருங்காயம் தூள் இரண்டு ஸ்பூன், கருப்பு அல்லது வெள்ளை எள் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள்1 1/2 ஸ்பூன், ஒரு மணி நேரம் ஊற வைத்த கடலை பருப்பு இரண்டு ஸ்பூன்,
வெண்ணெய் 1 1/2 ஸ்பூன் மற்றும் உப்பு தேவையான அளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து எடுத்து கொள்ளவும்.
உங்கள் தொப்புள் பற்றி அறிந்திராத தகவல் தெரிந்து கொள்ள?
பிறகு ஒரு வாழையிலை அல்லது பிளாஸ்ட்டிக் கவரில் எண்ணெயை நன்கு தடவி கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை எண்ணெய் தடவிய பேப்பரில் வைத்து தட்டையை கையினால் விரித்து விடவும்.
இவ்வாறே எல்லா சிறு உருண்டைகளையும் தட்டைகளாக விரித்து விடவும். பின் தட்டி வைத்துள்ள தட்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். சுவையான தட்டை முறுக்கு தயார்,