ஆண்மை குறைவை போக்க உதவும் ஊட்டசத்து நிறைந்த இறால் !





ஆண்மை குறைவை போக்க உதவும் ஊட்டசத்து நிறைந்த இறால் !

0

உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை "ஆரோக்கிய உணவு". 

ஆண்மை குறைவை போக்கும் உதவும் இறால் !

நாம் உண்ணும் ஒவ்வொரு உணவு வகைகளிலும் பல்வேறு வித நன்மைகள் இருக்கிறது. 

உணவு என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவையாக கருதப்படுகிறது. சில உணவுகளில் அதிக ஊட்டசத்துக்கள் இருக்கும். சிலவற்றில் மிக சில சத்துக்களே இருக்கும். 

உணவின் மூலம் வரலாம் 'மூலம்' !

நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பது தான் ஆரோக்கிய உணவு என்பதாகும். 

ஆனால், ஒரு சில உணவுகளில் மட்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும். 

ஆண்மை குறைவை போக்கும் உதவும் ஊட்டசத்து நிறைந்த இறால் !

என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிப்பது மிகவும் சிரமம். 

ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். அப்படிப்பட்ட பல்வேறு உணவுகளில் நாம் சாப்பிடும் கடல் சார்ந்த உணவும் ஒன்று.

இடுப்பு வலி வருவது ஏன் ?

மீன் முதல் சிறு கடற்பாசி வரை எல்லாவற்றிலும் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. அந்த வகையில் இறாலில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம்.

கடல் உணவு

கடல் உணவு

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என்று பட்டியலிடும் போது, அதில் Sea foods மிக முக்கிய இடத்தைப் பிடித்து விடும். 
டோனியை பின்னால் இறக்கியது ஏன்? - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி !

கடல் எப்படி அளவிட முடியாத பிரம்மாண்டம் கொண்டதோ, அதே போல் கடல் உணவுகளின் பெயர்களும் எளிதில் சொல்லிவிட முடியாத எண்ணிக்கை கொண்டது. 

நாம் அதிகமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது மீன், இறால், நண்டு மற்றும் கணவாய் போன்ற ஒரு சில உணவுகள் தான். 

கடலில் பல வகையான ஜீவ ராசிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை இன்னும் நாம் அறியாமலே இருந்து வருகின்றோம். 

கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் தேய்வதும் அறிகுறியும் !

கடல் சார்ந்த உணவுகள் அனைத்தும் அத்துணை ருசியாகவும், நலன்கள் தர கூடியதாகவும் இருக்குமாம். கடல் உணவுகளில் பல வகையான சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன.

இறாலின் நலன்கள்

இறாலின் நலன்கள்

இறால் ஒரு முக்கிய கடல் உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்ணுவார்கள். 

இவற்றில் பல வித ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. உலக அளவில் இதற்கென்றே பிரத்தியேக உணவு பிரியர்கள் இருக்கின்றனர். 

குதிகால் வலி ஏற்படுவது ஏன்?

கடல் உணவுகளில் மிகவும் அற்புதமான சுவையையும், உடல் ஆரோக்கியத்தையும் இவை கொண்டுள்ளது. 

இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். 

இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும்.

ஊட்டச்சத்துக்கள்

இறால் ஊட்டச்சத்துக்கள்

எண்ணற்ற நன்மைகளை இந்த இறால் கொண்டுள்ளது.

- மிகவும் குறைந்த அளவிலான கொழுப்புகள்

- அதிகமான புரதம்

- கலோரிகள்

- கால்சியம்

- பொட்டாசியம்

- செலினியம்

- விட்டமின் எ, ஈ

- பாஸ்பரஸ்

எதிர்ப்பு சக்தியை கூட்டும்

எதிர்ப்பு சக்தியை கூட்டும்

பலருக்கு எதிர்ப்பு சக்தி குறைபாடு அதிகம் ஆகி கொண்டே வருகிறது. அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கவே இந்த இறால்கள் பெரிதும் பயன்படுகிறது. 

மலவாயிலில் அரிப்பு !

இவற்றில் உள்ள அதிகப்படியான ஜின்க் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கூட்ட இந்த இறால் உதவுகிறது.

வயதான தோற்றம் 

வயதான தோற்றம்

சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. 

எந்தவித பாதுகாப்பும் இன்றி சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும் அதன் புறஊதா கதிர்வீச்சுக்கள் சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். 

தோல் தொல்லையும் அதற்கான காரணமும் !

இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.

கிட்னியும் இறாலும்

கிட்னியும் இறாலும்

கிட்னியில் ஆரோக்கியத்தை மேம்படுத்த இறால்கள் பெரிதும் உதவுகிறது. 

ரத்த நாளங்களை சீராக்கி கிட்னியின் ஏற்பட கூடிய கோளாறுகளை இவை தடுக்க கூடியதாம். அத்துடன் ரத்த ஓட்டத்தையும் உடலில் செம்மைப்படுத்துகிறதாம்.

ஒல்லி பெல்லி இடை

ஒல்லி பெல்லி இடை

பலரின் நீண்ட கால ஆசையாக இருப்பது, கச்சிதமான இடையுடன் கூடிய உடல் அமைப்பு வேண்டும் என்பதே. 

ஒருவருக்கு அழகான உடல் அமைப்பை இந்த இறால்கள் பெற்று தருகிறது. இறாலில் குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது. 

நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க !

எனவே இவை டயட் உள்ளவருக்கு சிறந்த உணவாக இருந்து நலமான உடலை தரும்.

எலும்பின் தரம்

எலும்பின் தரம்

இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். 

உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால் எலும்பின் தரம், திணிவு, திடம் மற்றும் ஒட்டு மொத்த உடலிலும் சிதைவு ஏற்படும். 

கீழ் வாதத்திற்கான காரணங்களும் அவற்றுக்கான வைத்திய சிகிச்சைகளும் !

இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய்க்கான அறிகுறியாகும். 

உணவில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால் எலும்பில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை நீங்கி அதற்கு மீண்டும் வலு சேர்க்கும்.

ஆண்மை குறைவு

ஆண்மை குறைவு

சீனர்களின் மருத்துவத்தில் இந்த இறாலை ஆண்களின் பிரச்சினைகளை குணப்படுத்த பயன்படுத்துவார்களாம். 

குறிப்பாக ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ள ஆண்களுக்கு இறால் அற்புத மருந்தாகும். பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இல்லற வாழ்வில் நலம் பெற இவை செய்கிறது.

புற்றுநோயை கட்டுப்படுத்த

புற்றுநோயை கட்டுப்படுத்த

பொதுவாக ஒரு சில உணவு வகைகளே புற்றுநோயை தடுக்க கூடியதாக இருக்கும். அதிலும் கடல் உணவுகள் பலவகை நோய்களை தடுக்க கூடிய ஆற்றல் பெற்றதாம். 

நூறு ரூபாயில் புற்று நோய்க்கான மருந்து !

இறாலில் உள்ள செலினியம் புற்றுநோய் செல்களை உடலில் உருவாகாமல் தடுக்கிறதாம். அத்துடன் எந்த வித நோய்களையும் அண்டாமல் காக்குமாம்.

ரத்த அழுத்தத்தை போக்க

ரத்த அழுத்தத்தை போக்க

உங்களுக்கு அதிக ரத்த அழுத்தம் பிரச்சினைகள் இருந்தால் சிறந்த மருந்தாக இந்த இறால் இருக்கும். 

வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு !

இவை, உயர் ரத்த அழுத்த கோளாறுகளை குணப்படுத்த கூடிய ஆற்றல் கொண்டவை. இவற்றில் சோடியம் அதிக அளவில் இருப்பதால் இதய நோய்களுக்கு சிறந்த முறையில் உதவுகிறது.

ஒமேகா 3 மற்றும் செலினியம் 

ஒமேகா 3 மற்றும் செலினியம்

இறாலில் அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை உடலில் சீரான செயல்பாட்டை தந்து ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. 

குறிப்பாக மூளையின் செயல்திறனை இறால் மேம்படுத்துகிறது. இறாலில் உள்ள சில முக்கிய சத்துக்களில் இந்த செலினியமும் ஒன்று. 

புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள் !

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உற்பத்தியை நிகழ்த்த செலினியம் பெரிதும் உதவுகிறது. எனவே இவை உடலின் செல்களை சுறுசுறுப்பாக வைத்து இளமையான உடல் சூழலை ஏற்படுத்தி தருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)