பசும் பாலில் இருந்து தயாரிக்க படும் நெய் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. நெய் என்பது தெற்காசிய நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் தெளிந்த வெண்ணெய் ஆகும்.
தனியாகப் பிரித்தெடுத்த வெண்ணெய் அல்லது பாற்கொழுப்பை உருக்கும் போது நெய் உருவாகின்றது. ஒரு கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது. இது உடல் பருப்பதைத் தடுக்கிறது.
வீட்டிலேயே ரசகுல்லா செய்வது எப்படி?
உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
தினமும் காலையில் எழுந்ததும் ஒவ்வொருவரும் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கத்தை அன்றாடம் மேற்கொள்வார்கள்.
ஆனால் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், பல ஆய்வுகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் படி, காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக கூறுகின்றன.
அதுவும் அதிகாலையில் ஒரு ஸ்பூன் நெய் உட்கொண்டு, பின் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால், நாம் நினைத்திராத அளவில் உடல் ஆரோக்கியம் மேம்படுமாம். நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம் !
அல்சைமர் நோய்
நெய்யை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் மூளைச் செல்கள் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, மூளையில் உள்ள நரம்புகள் சரியாக தூண்டப்பட்டு நினைவாற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
அதோடு அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்கள் வராமலும் தடுக்கப்படும்.உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்.
சத்துகள்
நெய்யில் உடலுக்குத் தேவையான அனைத்து விதமான ஊட்டச் சத்துக்களும் உள்ளன. நெய்யில் கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன.
இதில் இருக்கும் இந்த கொழுப்பு அமிலங்களை உடலில் இருக்கும் கல்லீரல் நேரடியாக செரிமானம் செய்து, அவற்றை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுகிறது.
நாடு முன்னேறுகிறதா, இல்லையா? ஜி.டி.பி என்றால்?
நெய்யில் அதிகமாக வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இந்த சத்துகள் உடலில் நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகரித்து இதயம் மற்றும் கல்லீரல் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
மேலும் கண் பார்வை ,எலும்புகள் சக்தியடையவும் உதவுகின்றன. அதிக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் நெய் அதிகம் சாப்பிடுவதால் உடலுக்கு வேண்டிய சக்தியை தந்து உதவுகிறது.
மேலும் நெய்யில் அதிகமாக இருக்கும் கொழுப்பு அமிலங்களை உடலில் இருக்கும் கல்லீரல் நேரடியாக செரிமானம் செய்து, அவற்றை உடலுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
நோயெதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு உடலில் அடிக்கடி பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஆனால் நெய் உணவுகளை சாப்பிடும் போது இத்தகைய நோய்த் தொற்றுக் கிருமிகளை அழித்து உடல் நலத்தைக் காக்கும். மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
கொலஸ்ட்ரால் பிரச்சனை
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம்.
வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்து விடும்.
ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்கள் பற்றி தெறியுமா?
கிருமிகள் அழிய
புற்களை மட்டுமே தின்று வளரும் பசுக்களில் இருந்து பெறப்படும் பாலை வெண்ணெய் ஆக்கி, அந்த வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யில் லினோலிக் ஆசிட் மற்றும் சங்கிலி தொடர் கொழுப்பு அமில வேதிப்பொருட்கள் இருக்கின்றன.
இந்த வேதிப்பொருட்களுக்கு வைரஸ் கிருமிகளை எதிர்த்து செயல்புரியும் ஆன்டி- ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்ததாக இருக்கிறது. இவை உடலை பாதிக்கும் எத்தகைய வைரஸ் கிருமிகளையும் எதிர்த்து செயல் புரிந்து உடல் நோய்வாய்ப் படாமல் தடுக்கிறது.
பெண்களின் கர்பப்பையை பாதுகாக்கும் கழற்சிக்காயின் பயன்கள் !
பசி உணர்வு அதிகரிக்க
நன்கு பசியுணர்வு ஏற்பட்ட பின் உணவு சாப்பிடுவதால் எளிதில் செரிமானமாகி, உடலுக்கு சக்தியைத் தந்து நோய் நொடிகள் இல்லாத தன்மையை ஏற்படுத்துகிறது.
நெய்யில் கேஸ்ட்ரிக் அமிலங்கள் அதிகம் இருக்கிறது. நெய்யைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால், பசி உணர்வு நன்கு தூண்டப்படுகிறது.
வயிற்றில் சேரக்கூடிய எத்தகைய உணவுகளை செரிக்க கூடிய, செரிமான அமிலங்கள் சமசீர் தன்மையை காக்கிறது. எனவே வயிறு மற்றும் குடல்களை வலுப்பெறச் செய்து உடல் நலத்தை மேம்படுத்துகிறது.
அதிக மருத்துவ குணங்களை கொண்ட மாசிக்காய் பயன்கள் !
புற்றுநோய்
நெய் சேர்த்த உணவுகளை அதிகம் சாப்பிடும் போது குடலில் ஏற்படக்கூடிய புண்கள், வீக்கம் மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல் பட்டு இந்த நோய்கள் வருவதை முற்றிலும் தடுக்கிறது.
உடல் எடை
நெய் மிதமான சங்கிலித்தொடர் கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்தது என்பதை ஏற்கனவே அறிவோம்.
எந்த விதமான சங்கிலித் தொடர் கொழுப்பு அமிலங்கள் உடலில் அதிகளவில் இருக்கின்ற கொழுப்புகளை எரித்து, உடலுக்கு தேவையான சத்துக்களாக மாற்றுகிறது.
இத்தகைய தேவையற்ற கொழுப்புச் சத்து குறைவதால் உடல் எடை சீக்கிரமாக குறைகிறது. எனவே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் நெய் கலந்த உணவுகளை தாராளமாக சாப்பிடலாம்.
பள்ளியிலேயே தகாத உறவு.. ஆசிரியருக்கு தர்ம அடி !
செரிமானம்
வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும்,மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்ப வர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகி விடும்.
இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும். இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால்
குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.
நெய் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடும் போது நல்ல செரிமானம் நடைபெற உதவுகிறது. மேலும் பாலில் சிறிதளவு நெய் கலந்து சாப்பிட்டால் வயிற்று சிக்கலை போக்கி உடலை சீர்படுத்துகிறது.
இறால் வறுவல் செய்முறை !
தலைமுடி
தலைமுடி உதிர்வு நெய்யை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.
பால் ஒவ்வாமை
சில நபர்களுக்கு பால் அருந்துவதாலும், பால் கொண்டு செய்யப்பட்ட உணவு பொருட்கள் உண்டாலும் ஏற்படும் ஒவ்வாமை நிலையை லாக்டோஸ் இண்டாலரன்ஸ் (Lactose Intolerance) என அழைக்கின்றனர்.
இந்த ஒவ்வாமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பாலில் இருக்கும் கேசின் எனப்படும் கொழுப்பு சத்தாகும்.
ஆனால் நெய் என்பது பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட வெண்ணையை உருக்கி செய்யப்படுவதால் நெய்யில் இந்த கேஸின் கொழுப்பு சத்து இல்லாமால் போகிறது.
எனவே இந்த லாக்டோஸ் இண்டாலரன்ஸ் குறைபாடு இருப்பவர்களும் நெய் தாராளமாக சாப்பிடலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மீன் புளி வறுவல் செய்முறை !
மூட்டு வலி
இது மூட்டு இணைப்புக்கள் மற்றும் திசுக்கள் தொய்வடைவதைத் தடுத்து தடுத்து, மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
சருமம் வறட்சி
செல்களின் இயக்கம் ஆயுர்வேதத்தின் படி, நெய்யை ஒருவர் வெறும் வயிற்றில் எடுக்கும் போது, அது உடலினுள் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஊட்டமளித்து சீராக இயங்கச் செய்யுமாம்.
ஆகவே உடற்செல்கள் புத்துணர்ச்சி பெறவும், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாகவும் செயல்படும். மேலும் ,சருமம் பொலிவோடு காட்சியளிக்கும்.
முக்கியமாக சருமம் வறட்சியடையாமல் மென்மையாக இருக்கும். அது மட்டுமின்றி சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளும் குணமாகும்.
கண்களின் கீழ் வரும் வீக்கத்தை தடுக்க எளிய வழிமுறைகள் !
பியூடைரிக் அமிலம்
மற்ற உண்ணத்தகுந்த எண்ணெய் வகைகள் போலல்லாமல் நெய்யில் பியூடைரிக் அமிலம் (Butyric acid) எனப்படும் சிறிய சங்கிலித் தொடர் கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்துள்ளது.
இந்த பியூடைரிக் அமிலம் உணவு செரிமானம் ஆவதற்கு பெருமளவில் உதவுகிறது.
மனிதர்களின் வயிற்றின் குடற்சுவற்றில் உணவு செரிமானம் ஆவதற்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியா நுண்ணுயிர்கள், உணவில் இருக்கும் நார்ச்சத்தை பியூடைரிக் அமிலமாக மாற்றிக் கொள்கிறது.
இந்த நுண்ணுயிரிகளுக்கு வலுசேர்க்க பியூடைரிக் அமிலம் நிறைந்த நெய்யை அடிக்கடி சாப்பிடுவதால் உணவு செரிமானம் ஆவதில் குறைபாடுகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
அப்படிப்பட்ட நெய்யை எவ்வாறு பாதுகாக்கலாம்?
எப்போதும் நெய்யை நன்கு மூடி, சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைக்கவும். நெய் அடிக்கடி பயன்படுத்துவதாக இருந்தால், குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம்.
மாறாக சுத்தமான கன்டெய்னரில், காற்று புகாதபடி அடைத்து வைத்தால், இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை, நெய் கெடாமல் இருக்கும்.
மேலும்,வெப்பமான காற்றில் திறந்தீர்கள் ஏன் என்றால், நீரானது நெய்யுடன் சேர்ந்து கெட்டு விட வாய்ப்புள்ளது.
மலேரியா காய்ச்சலுக்கு புதிய மருந்து !
முடிவு
பெரும்பாலானோர் நெய் உடல் பருமனை அதிகரிக்க மட்டுமே செய்யும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் தினமும் காலையில் 1 ஸ்பூன் நெய் உட்கொள்வதால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு உடல் எடை தான் குறையும்.