சர்க்கரைக்கு மாற்றாக அதுவும் பெருவாரியான மக்களை பாடாய்ப்படுத்தி வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக வந்திருப்பதே இனிப்புத் துளசி எனப்படும் சீனித் துளசி.
சீனித் துளசியில் இருந்து எடுக்கப்படும் ஸ்டீவியோசைடு (Stevioside) மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside) போன்ற வேதிப்பொருள்களே இனிப்புத் தன்மைக்கு முக்கியக் காரணமாகும்.
கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கு அதிகமாக இனிப்புத் தன்மை கொண்டிருந்தாலும் மிகக்குறைந்த சர்க்கரை மற்றும் மாவுச்சத்து கொண்ட பொருட்களே இதில் உள்ளன.
சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுத்தப்படும் இந்த சீனித் துளசி உலக நாடுகள் பலவற்றிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
சீனித் துளசியில் சர்க்கரை இயற்கையாகக் காணப்படுவதால் சர்க்கரை நோயாளிகள் இதை தாராளமாகப் பயன்படுத்தலாம்.
மிகக்குறைந்த அளவு சர்க்கரை மற்றும் மாவு சத்து கொண்ட இந்த துளசி நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இதில், கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கு இனிப்புச்சுவை அதிகம். ஆனாலும், குறைந்த அளவு சர்க்கரை, மாவுச் சத்துகளைக் கொண்ட பொருள்களே இதில் உள்ளன.
குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இனிப்புச்சுவை கொண்டது; சர்க்கரை (சீனி), வெல்லத்தைவிட பலமடங்கு இனிப்புச்சுவை உடையது.
ஆனாலும் இதைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது; சர்க்கரைநோய் ஏற்படவும் வாய்ப்பிலை.
இதனால் சர்க்கரையின் அளவில் எந்தப் பிரச்னையும் இருக்காது. மாறாக வெள்ளைச் சர்க்கரையில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், உணவு எளிதில் செரிமானமாகாது.
ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாகும், கொழுப்பு உருவாகும். இதனால், உடல் பருமன், இதயநோய் பாதிப்புகள் ஏற்படும்.
இதே போல், வெள்ளைச் சர்க்கரையில் சோடியத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
இது சர்க்கரை நோயை மட்டுமல்லாமல் மற்ற நோய்கள் வருவதற்கும் காரணமாகி விடும். சீனி துளசியில் தேவையான பொருள் இலைகள் மட்டுமே.
பூக்கள் பூத்தால் செடியின் வளர்ச்சி நின்று விடும். பூக்கள் தென்படும் போதெல்லாம் நுனியை கிள்ளி பூக்களை எடுத்து விட்டால் செடி செழித்து வளரும்.
ஆண்டிற்கு நான்கு முறை அறுவடை செய்யலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. துளசி என்றாலே மகத்துவம் வாய்ந்தது என்று தான் பொருள்.
ஆனால், இந்தச் செடிகளை கவனமாகப் பராமரிக்க வேண்டும். 2 அடி முதல் 3 அடி உயரம் வளரக்கூடிய இத்துளசி, இயற்கை உரம் மற்றும் மக்கிய தொழு உரத்தில் மட்டுமே வளரும்.
இது மிட்டாய் இலை, இனிப்பு இலை மற்றும் சர்க்கரை இலை எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
சீனித் துளசியின் பயன்கள்
செரிமானக் கோளாறுகளை சீராக்கும் இது அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. தோல் நோய்களைத் தீர்க்கும் மருந்துகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.