வெண்கடுகு சாம்பிராணி போடுவதால் உண்டாகும் நன்மைகள் !





வெண்கடுகு சாம்பிராணி போடுவதால் உண்டாகும் நன்மைகள் !

0

வீக்கம் மற்றும் வலியை போக்க கூடியதும், கருப்பை கட்டிகளை கரைக்க வல்லதும், செரிமானத்தை தூண்டக் கூடியதும், இருமல், விக்கலை சரிசெய்ய கூடியதும், ரத்த ஓட்டத்துக்கு மருந்தாக பயன்படுவதுமான வெண்கடுகு பல மருத்துவ பலன்களை கொண்டது.

வெண்கடுகு சாம்பிராணி போடுவதால் உண்டாகும் நன்மைகள் !
கடுகை போன்று பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது வெண்கடுகு. கடுகு வகையை சேர்ந்த இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.  

வெண்கடுகை பயன்படுத்தி கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்ககூடியதும், செரிமாணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். வெண் கடுகை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். 

அரை ஸ்பூன் வெண்கடுகு பொடி, ஒரு சிட்டிகை மிளகு, சிறிது உப்பு, 2 சிட்டிகை பெருங்காய பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். 

கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு !

இதை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை எடுத்துக் கொண்டால், இது செரிமானத்தை தூண்டும். கருப்பை கோளாறுகளை சரிசெய்யும். வெண்கடுகு உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. 

இரையறை கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது. சிறுகுடலில் உள்ள மென் திசுக்களை தூண்டக் கூடியது. மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும். கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைத்து, கருப்பைக்கு பலம் தரக்கூடியது.

வெண்கடுகு, நாய்க்கடுகு, மருதாணி விதை, சாம்பிராணி, அருகம்புல், வில்வ இலை, வேப்ப இலை இவைகளை நன்றாக காய வைத்து தூளாக்கி சம்பிராணியுடன் கலந்து வீட்டில் அடிக்கடி தூபம் போட வேண்டும். 

இந்த கலவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக் குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது. 

அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும். வில்வம் மற்றும்  வேம்பு முறையே சிவன் மற்றும் சக்தி இவர்களுக்குரியது. 

மேற்கண்ட பொருட்களை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள். 

இப்படி செய்யும் பொழுது வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை, தம்பதியினருக்கு மத்தியில் 

வாக்குவாதங்கள், திருஷ்டி, எதிர் மறை  சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படும். 

ஏவல், பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும், நவ கிரக தோஷங்கள் நீங்கி விடும், எதிரிகள் தொல்லை, இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்.

இரும்பு கழிவில் கட்டுமான கற்கள் !

கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும், எதிரிகள் தொல்லை விலகும். 

வெண்கடுகு சாம்பிராணி போடுவதால் உண்டாகும் நன்மைகள் !

வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும். வீண் சண்டை, அமைதியின்மை, தூக்கமின்மை போன்றவை அகலும். நோய் தொல்லை நீங்கும் எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது. 
கட்டுமான இயந்திரங்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை !

பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால், வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும். 

மேலும்  விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும். எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)