சூப்பரான போன்லெஸ் மட்டன் மசாலா செய்வது எப்படி?





சூப்பரான போன்லெஸ் மட்டன் மசாலா செய்வது எப்படி?

0

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் அசைவ பிரியரா? அப்படியானால் உங்கள் உணவில் ஆட்டுக்கறி/ மட்டனை தவறாமல் சேர்த்து வாருங்கள். 

சூப்பரான போன்லெஸ் மட்டன் மசாலா செய்வது எப்படி?
நிறைய பேர் ஆட்டுக்கறி/மட்டன் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று நினைத்து, மட்டன் சாப்பிடுவதைத் தவிர்த்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் மட்டனை உணவில் சேர்ப்பதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பேண முடியும். 

ஏனெனில் ஆட்டுக்கறியில் வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் ஈ, பாஸ்பரஸ், செலினியம், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. 

பருந்து மனிதனுக்கு தரும் பாடம்

இது தவிர மட்டனில் ஜிங்க், புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புக்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், போன்றவையும் உள்ளன. 

முக்கியமாக மற்ற அசைவ புரோட்டீன் உணவுகளுடன் ஒப்பிடுகையில், ஆட்டுக்கறியில் கலோரிகள் குறைவு. எனவே ஆட்டுக்கறியை அடிக்கடி சாப்பிடா விட்டாலும், வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

நிறைய பேர் மட்டன் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மட்டன் ஒருவரது உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். 

ஏனெனில் மட்டனில் புரோட்டீன்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே மட்டனை உட்கொள்ளும் போது, அது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கிறது. 

இதன் மூலம் உடல் எடை குறைய மட்டன் உதவுகிறது. இது தவிர மட்டனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைக் குறைக்க உதவுகிறது. 

எனவே எடையைக் குறைக்க நினைப்போர் மட்டனை தங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.

தேவையானவை:

மட்டன் - 250 கிராம்

சின்னவெங்காயம் - 10

பச்சை மிளகாய் - ஒன்று

தக்காளி - ஒன்று

கறிவேப்பிலை - சிறிதளவு

சீரகம் - முக்கால் டீஸ்பூன்

சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகு தூள் - அரை  டீஸ்பூன்

மிளகாய் தூள்  - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால்  டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - கால்  கப்

செய்முறை:

போன்லெஸ் மட்டன் மசாலா

மட்டனை நன்கு கழுவி சிறு துண்டுகளாக்கவும். கொழுப்பு உள்ள பீஸ் என்றால் சுவையாக இருக்கும். குக்கரில் மட்டன், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு 20 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும். 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். 

பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்கவும். நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும். 

எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி - Vitamin D !

பச்சை வாடை நீங்கியதும் வேக வைத்த மட்டன் துண்டுகள் மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து நன்கு கிளறவும். 

தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி பிரியாணி, தோசை, ஆப்பம், சாதம், இட்லியுடன் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)