சைவப் பிரியர்களுக்கு காக்டெயில் பிரியாணி செய்வது எப்படி?





சைவப் பிரியர்களுக்கு காக்டெயில் பிரியாணி செய்வது எப்படி?

0

காக்டெயில் பிரியாணி (காய்கறி பிரியாணி) என்பது சைவப் பிரியர்களுக்கு பிடித்த மசாலா உணவு வகைகளுள் ஒன்று. 

சைவப் பிரியர்களுக்கு காக்டெயில் பிரியாணி
எளிமையான முறையில் வீட்டில் காய்கறி பிரியாணி (வெஜ் பிரியாணி) தயார் செய்யும் முறை பற்றி கீழே காண்போம்.

தேவையானவை:

பாசுமதி அரிசி - ஒரு கப்

தண்ணீர் முக்கால் கப்

தேங்காய் பால் - முக்கால் கப்

நெய் - 100 கிராம்

ரீபண்ட் ஆயில் - 100 கிராம்

முருங்கை பீன்ஸ்- 50 கிராம்

பச்சை பட்டாணி - 50 கிராம்

பீன்ஸ் - 50 கிராம்

கேரட் - 50 கிராம்

எலுமிச்சை பழம் - 1 

நெய்- தேவையான அளவு

கொத்த மல்லி இலை - தேவையான அளவு 

புதினா இலை-தேவையான அளவு 

பச்சை மிளகாய் - 3 எண்ணம்

முந்திரி பருப்பு - 6 எண்ணம்

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

பட்டை - ஆள்காட்டி விரல் அளவு

கிராம்பு - 2 எண்ணம்

ஏலக்காய் - 3 எண்ணம்

சின்ன வெங்காயம்- 100 கிராம்

இஞ்சி- சுண்டு விரல் அளவு

வெள்ளைப்பூண்டு - 3 பற்கள் 

கசகசா - 2 தேக்கரண்டி

முந்திரி பருப்பு & தேவையான அளவு

செய்முறை:

சைவப் பிரியர்களுக்கு காக்டெயில் பிரியாணி செய்வது எப்படி?

அரிசியைக் நன்றாக கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள். இதனிடையே, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைத் தெடுங்கள். 

காய்கறிகளை நறுக்கி வைத்து கொள்ளுங்கள். வெங்காயத்தை நீளவாக்கிலும் தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளுங்கள்.

இதன் பின், குக்கரில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து பிரிஞ்சி இலை, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

இதன் பிறகு, காய்கறி, தக்காளி, தேவையான உப்பு, மஞ்சள் தூள், தயிர், புதினா, மல்லித்தழை ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்குங்கள்.

ஊறிக்கொண்டிருக்கும் அரிசியை, தண்ணீருடன் மேற்கண்ட கலவையில் சேர்த்துக் கிளறி, மூடி போட்டு, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, சிறு தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்குங்கள். 

இறுதியாக முந்திரிப் பருப்பு மற்றும் மேற்புறமாக தூவி சூடாக பரிமாறுங்கள். சூப்பரான புலாவ் சுவை கிடைக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)