கிராமத்து கொத்துக்கறி குழம்பு செய்வது எப்படி?





கிராமத்து கொத்துக்கறி குழம்பு செய்வது எப்படி?

0

தேவையானவை:

கொத்துக்கறி - 250 கிராம் 

மல்லி (தனியா) - 2 டேபிள் ஸ்பூன் 

சின்ன வெங்காயம் - 10

இஞ்சி - 2 இன்ச் துண்டு

தேங்காய் - அரை மூடி 

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 3

காய்ந்த மிளகாய்  - 10

கொத்த மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன் 

பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன் 

ஏலக்காய் - 4

கிராம்பு - 4

பட்டை - ஒன்று 

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

எலுமிச்சை  - அரை மூடி 

உப்பு - தேவையான அளவு

புதினா இலை - சிறிதளவு

கசகசா - ஒரு டேபிள் ஸ்பூன் 

சீரகம் - அரை டீஸ்பூன்

நெய் - 1 டேபிள் ஸ்பூன் 

எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் 

பிளாக் டீ குடிப்பது நல்லதா? கெட்டதா? தெரிந்து கொள்ளுங்கள் !

செய்முறை:

கிராமத்து கொத்துக்கறி குழம்பு

கொத்துக் கறியை, தண்ணீரில் அலசி வைக்கவும். தேங்காயைத் துருவி 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து தேங்காய்ப்பால் எடுத்து வைக்கவும். 
கத்திரிக்காய் சாத பொடி செய்வது !

இஞ்சி-பூண்டை நன்றாகத் தட்டி வைத்துக் கொள்ளவும் (வேண்டுமானால் விழுதாக அரைத்துக் கொள்ளலாம்). 

மசாலா தயாரிக்க, அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் மல்லி (தனியா), பொட்டுக்கடலை, சீரகம், 

காய்ந்த மிளகாய், கசகசா அனைத்தையும் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் நன்கு வாசனை வரும் வரை வதக்கவும் 

(கருகி விட்டால் சுவை, மணம் இல்லாமல் போய் விடும் கவனம்). அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். 

சுவையான புளியோதரை பொடி செய்வது எப்படி?

இந்த விழுதை, எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப்பாலில் கலந்து வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். 

பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தட்டிய இஞ்சி-பூண்டு (அல்லது பேஸ்ட்) சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். 

கொத்த மல்லித்தழை, புதினா இலைகளைச் சேர்த்து இலைகள் சுருங்கும் வரை வதக்கவும். 

தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கழுவி வைத்துள்ள கொத்துக்கறியைச் சேர்த்து நன்றாக 2 நிமிடங்கள் வதக்கவும். 

கறிக் கலவையில் தேங்காய்ப்பால்-விழுதுக் கலவையைச் சேர்த்துக் கிளறிவிட்டு குக்கரை மூடி 10 - 12 நிமிடங்கள் வேக விடவும். 

கைகழுவக்கூடாத விஷயங்களில் ஒன்று தான் கை கழுவுவது ! 

அடுப்பை அணைத்து, பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கி விட்டுப் பரிமாறவும்.

குறிப்பு:

பொட்டுக்கடலை குழம்பின் சுவையைக் கூட்டும்; குழம்பின் அடர்த்தியையும் அதிகரித்துக் கொடுக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)