பயறு வகைகளில் பெரும்பாலும் புரத சத்து, நார்சத்து நிறைந்து காணப்படுகின்றன. பயறு வகைகளில் மிகவும் சிறந்தது பச்சைப்பயறு. இதில் நிறைய அளவு கலோரிகள் காணப்படுகிறன.
ஏனென்றால் இதில் காணப்படக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடம்பில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுத்து மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கிறது.
விக்ரம் எஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் !
தினை சிறுதானியங்களில் முக்கியமானது. தானியங்களில் அதிகம் பயிரிடப்படுவதில் இரண்டாவது இடம் இதற்கு உண்டு என்றும் சொல்லலாம்.
இதை உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள். இதை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். தினையில் கால்சியம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை உண்டு.
தினைக்கு உள்ள சிறப்பு மற்ற தானியங்களை காட்டிலும் இதில் கால்சியம் அதிகமாக உள்ளது. அரிசி, கோதுமை, கேவரகை காட்டிலும் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
கோதுமையில் இருப்பதை விட குறைவாக புரதம் இருந்தாலும் மற்ற பொருள்களோடு கலந்து உண்னும் போது இவை சமன் செய்யப் படுகிறது.
தேவையானவை . :
தினை - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
முளைக்கட்டிய பாசிப்பயறு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
நறுக்கிய தக்காளி - அரை கப்
மிளகு -1 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பட்டை - 1
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன்
கொத்து மல்லித்தழை - தேவையான அளவு
செய்முறை . :
இரண்டரை கப் தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி விசில் போட்டு மிதமான தீயில் பத்து முதல் பதினைந்து நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும் அப்படியே ஆற விடுங்கள்.
கடல் அலை எப்படி உருவாகிறது? தெரியுமா?
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, மிளகு, பட்டை, கறிவேப்பிலை, சீரகம், காய்ந்த மிளகாய், வெந்தயம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அவை நன்றாகப் பொரிந்ததும், நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயத்தின் நிறம் மாறியதும் நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். வெந்த அரிசி கலவையை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி கொத்த மல்லித்தழை தூவி இறக்கவும்.