இந்த இறைச்சி அதிகச் சுவை உள்ளதாகும். ஆண்மையைப் புத்துணர்வு பெற வைக்கும் தன்மை இந்த இறைச்சிக்கு உண்டு.
நன்மைகள் இவ்வாறு இருப்பினும், இ இறைச்சிக்குச் சில தீய பண்புகளும் இல்லாமல் இல்லை.
இந்த இறைச்சியினைத் தொடர்ந்து உண்பவர்களுக்குக் கபம் அதிகரிக்கும் என்றும், கரப்பான் எனனும் தோல் நோய் உண்டாகும் என்றும் பதார்த்த குணபாடம் கூறுகிறது.
வான்கோழி இறைச்சி - 500 கிராம்
உரித்த வெங்காயம் - 10௦ கிராம்
உரித்த பூண்டு - 2
பட்டை - 1 துண்டு
அன்னாசிப் பூ - 1
கிராம்பு - 3
பச்சை மிளகாய் - 6
சோம்பு - 72 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி
ரொட்டி ஸ்லைஸ் - 5
எலுமிச்சம் பழம் - 2 மூடி
நெய் - 6 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு ஏற்ப
வான்கோழி இறைச்சியைச் சுத்தப்படுத்தித் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறித் துண்டுகளில் வினிகரை ஊற்றி நன்றாகப் பிசறி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி நெய்யை ஊற்றி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நறுக்காமல் முழுசு முழுசாகப் போட்டு
இரண்டிரண்டாய் அரியப்பட்ட பச்சை மிளகாய், கிராம்பு, பட்டை, அன்னாசிப் பூ ஆகியவற்றையும் போட்டு நன்றாகச் சிவக்கும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் வான்கோழி இறைச்சியைப் போட்டுக் கிண்டி மூடி விடவும். கறியில் நீர் சுண்டிய பின், சோம்பை வறுத்துத் தூள் செய்து, மிளகுத் தூளுடன் கலந்து கறியில் போட்டு நன்கு கிளறி விடவும்.
தேவையான அளவு உப்பை நீரில் கரைத்து இறைச்சியில் விடவும். கறிநன்கு வெந்து தண்ணீ சுண்டிய பின், ரொட்டி ஸ்லைஸ்களை நீரில் ஊற வைத்துப் பிசைந்த, நீரை வடித்து விட்டு இறைச்சியொடு சேர்த்துக் கிளறவும்.
இப்போது மீதமுள்ள நெய்யை ஊற்றிக் கிளறிக் கொண்டிருந்து கறி சுருண்டு நெய் பிரிந்த பிறகு எலுமிச்சம் முடியைப் பிழிந்து கிளறி இறக்கி விடவும். சூட்டொடு பரிமாறினால் சுவையாக இருக்கும்.