பீட்ரூட்டில் ஆக்சலேட் அதிகம் உள்ளதால் நாம் உண்ணும் உணவுகளில் கால்சியம் உறிஞ்சப்படுவதைக் குறைக்கும்.
இதனால் சிறுநீரக கற்களை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. ஒரு நாளைக்கு அரை டம்ளர் பீட்ரூட் ஜூஸ் எடுத்துக் கொள்வது உத்தமம்.
பீட்ரூட் சாறு, அதிகளவு எடுத்துக் கொள்ளும் போது, குரல் வளை சுருக்கம் மற்றும் மூச்சுக்குழாயில் அழற்சி ஏற்படலாம்.
வாழை இலை குளியலும் நன்மைகளும்
பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் உள்ளதால், நாம் அதிகம் உண்ணும் போது, வயிற்று வலி ஏற்படலாம். இந்த நைட்ரேட்டுகள் கர்ப்ப காலத்தில் சிக்கலை உண்டாக்கும்.
சிலருக்கு பீட்ரூட் சேராத பட்சத்தில் தோல் தடிப்பு மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்கும் போது, இந்த பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு தான். இதில் பீட்ரூட் மட்டும் விதிவிலக்கா என்ன?
பீட்ரூட்டையும் அளவாக எடுத்துக் கொள்ளும் போது சிறப்பு. இல்லையெனில் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு ஆளாகுவோம். வாரத்திற்கு சில முறைகள் எடுத்துக் கொள்ளலாம்.
துபாயில் 17 பேர் பலியாகக் காரணமான டிரைவர் நாடு கடத்தல் !
வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறி, பழவகைகள் எப்போதும் விலை கூடுதலாகத் தான் இருக்கும்.
நாமும் அவற்றில் தான் ஊட்டச்சத்து அதிகம் என அதன் பின் ஓடிகொண்டிருப்போம். நமது சீதோஷண நிலையில் விளைந்தவை தான்.
அதே சீதோஷண நிலையில் வளர்ந்த நமக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை சிந்திக்க மறந்து விடுகிறோம்.
இயற்கையின் படைப்பில் எல்லா காய்கறி, பழவகைகளுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு.
எந்த உணவை ஃபிரிட்ஜில் வைக்கலாம்?
அப்படி இருக்க, காஸ்லியான வெளிமாநிலத்து அல்லது அயல்நாட்டு பழவகைகளில் உள்ள சத்தை காட்டிலும்,
நம்மூரில் விளையும் விலை குறைவான காய்கறிகளே அதிக ஊட்டச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது எனும் போது அதை நாம் பரீசீலிக்கலாமே?