மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் பார்லி கஞ்சியும் ஒன்று. இது ஒரு அற்புதமான சத்துப் பொருளாக இருக்கிறது. இதற்கு வாற்கோதுமை என்று மற்றொரு பெயரும் உண்டு.
மற்றும் 0.4 சதவீதம் கொழுப்பு சத்தும்.19.7 சதவீதம் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளது. பாஸ்பரசும் இரும்பு சத்தும் தாராளமான அளவிலேயே உள்ளன.
குழந்தைகளுக்கு காப்பி – டீ போன்ற பானங்களை கொடுப்பதை விட பார்லி கஞ்சியை தொடர்ந்து கொடுக்கலாம்.
நாளுக்கு நாள் இந்தியாவில் டயாபடீஸ் (நீரிழிவு) நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
நீரிழிவு நோயாளிகள் தாங்கள் சாப்பிடும் உணவு, பானங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பார்லி நீர் பற்றி கேள்விப் பட்டுள்ளீர்களா? இதுவொரு புத்துணர்ச்சி தரும் பானமாகும். பார்லி நீர் இயற்கையாகவே நமது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது.
இதில் நம் உடலுக்கு தேவையான பல நண்மைகள் உள்ளன. மேலும் இது நீரிழிவு நோயாளிகளின் சர்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
பார்லி நீரில் அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், திடீரென உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் ஆபத்தை இது குறைக்கிறது.
டைப் 2 டயாபடீஸ் நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடுவதை விட பார்லி நீர் குடிப்பதால், அவர்களின் ரத்த குளுக்கோஸ் அளவு குறிப்பிடத்தகுந்த அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.
பார்லி கஞ்சி
பார்லியை வெறும் வானொலியில் வறுத்து அதிலேயே நீர் ஊற்றி கொதிக்க விடவும். பின் உப்பு சேர்த்து கொஞ்சம் கஞ்சி போல கொதித்து வரும் வரை சமைத்து பின் வடிகட்டி பருகவும்.
புலியோடு போராடி உயிர் பிழைத்த வீரர்... அதிர வைத்த சம்பவம் !
கர்ப்ப காலத்தில் உள்ள தாய்மார்களுக்கு காலில் சுரம் ஏற்பட்டால் நீர் நன்கு போவதற்காக தருவார்கள்.
கொலஸ்ட்ராலை அழிப்பதற்கு இந்த கஞ்சி ஒரு சிறந்த மருந்து. இதை அடிக்கடி சாப்பிடுவது மூலம் நரம்புகள் வலுப்படும்.
பார்லி சப்பாத்தி
பின்னர் இந்த மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு சுட்டால் சத்தான பார்லி சப்பாத்தி ரெடி.
சைவப் பிரியர்களுக்கு காக்டெயில் பிரியாணி செய்வது எப்படி?
பயன்கள்
இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து சாப்பிட்டால் உடல் பருமனிலிருந்து விடுபடலாம். உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அழிப்பதற்கு இந்த சப்பாத்தி சிறந்த மருந்தாகும்.