பச்சை மாங்காய் ஜூஸ் குடிச்சா வெயில்ல கூட சில்லுன்னு இருக்கலாம் !





பச்சை மாங்காய் ஜூஸ் குடிச்சா வெயில்ல கூட சில்லுன்னு இருக்கலாம் !

0

கோடை காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் ஒன்று தர்பூசணி மற்றொன்று மாம்பழம். 

பச்சை மாங்காய் ஜூஸ் குடிச்சா வெயில்ல கூட சில்லுன்னு இருக்கலாம் !

ஏனெனில் இவை இரண்டுமே சீசன் வகை பழமாகும். அதிலும் மாம்பழம் என்பது இக்காலகட்டத்தில் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. 

அதனால் தான் மக்களும் மாம்பழ ஜூஸ் இவற்றை நாடுவதுண்டு. பழுக்காத மாம்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸில் ஏராளமான நன்மைகள் காணப்படுகிறது. 

இந்த மாம்பழ ஜூஸ் (Mango Juice) கண் பார்வை ஆரோக்கியம் முதல் ஊட்டச்சத்து பற்றாக்குறை வரை சரி செய்கிறது.

இவை இயற்கையாகவே சுவையான சத்து நிறைந்த பானமாகும். இந்த மாம்பழ ஜூஸை பொருத்த வரை உங்க உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது.

​மாம்பழம்

மாம்பழம் ஜூஸ்

மாம்பழத்தில் விட்டமின் சி, பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், இரும்புச் சத்து என அனைத்து வகை ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது. 

இந்த மாம்பழ ஜூஸ் இந்தியாவைப் பொருத்த வரை மிகவும் புகழ் பெற்றது. இது உங்களுக்கு சிறந்த புளிப்பு இனிப்பு சுவையை கொடுக்க கூடியது.

இந்த மாம்பழ ஜூஸை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள், இரத்த கோளாறுகள், சரும தரம் மேம்படுதல், கண் ஆரோக்கியம் என பலவித நன்மைகளை அளிக்கிறது. 

இது மன அழுத்தம், நீர்ச்சத்துயின்மை மற்றும் வயிற்று போக்கு போன்ற பலவித பிரச்சினைகளை போக்கக்கூடும். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆற்றலை அளிக்க கூடியது.

​பழுக்காத பச்சை மாம்பழ ஜூஸ் செய்வது எப்படி?

​பழுக்காத பச்சை மாம்பழ ஜூஸ் செய்வது எப்படி?

பழுக்காத பச்சை மாம்பழ ஜூஸ் ஒரு சுகாதார பானமாகும். இந்த பழுக்காத மாம்பழ ஜூஸ் பார்ப்பதற்கு வெளிர் பச்சை அல்லது மஞ்சள் கலரில் காணப்படும். 

இதில் கூடுதல் சுவைக்காக உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. சில சமயங்களில் இன்னும் வாசனைக்காக சீரகப் பொடி சேர்க்கப்படுகிறது. 

இதில் புதினா இலைகளையும் சேர்த்து இந்த ஜூஸிற்கு கூடுதல் பச்சை நிறத்தை கொடுக்கின்றன.

​ஊட்டச்சத்து அளவுகள்

​ஊட்டச்சத்து அளவுகள்

ஒரு கிளாஸ் பழுக்காத மாம்பழ ஜூஸில் 180 கலோரிகள் உள்ளன. இதில் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள், விட்டமின்கள் ஏ, பி1, பி2 மற்றும் சி போன்ற சத்துக்கள் உள்ளன. 

இதில் பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், இரும்புச் சத்து மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களும் காணப்படுகிறது. 

இதில் போலேட், பெக்டின், கோலைன் போன்ற ஊட்டச் சத்துக்களும் இதில் காணப்படுகிறது.

கலோரிகள் : 179

மொத்த கொழுப்பு 1 கிராம்

சோடியம்ன:26 மி. கி

பொட்டாசியம் :235 மி. கி

மொத்த கார்போஹைட்ரேட் :46 கிராம்

புரோட்டீன் :1 கிராம்

விட்டமின் மற்றும் தாதுக்கள் :8%

கால்சியம் :0.05

விட்டமின் சி :23%

இரும்புச் சத்து :10%

பக்கவாதம் சரியாக

பக்கவாதம் சரியாக

சோடியம் போன்ற தாதுக்கள் இழப்பால் பக்கவாதம் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பற்றாக்குறையை போக்க மாம்பழம் உதவுகிறது. 

இந்த மாம்பழத்தில் சோடியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் மிகுந்து நிறைந்து காணப்படுகிறது.

​ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது

​ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது

பழுக்காத மாம்பழ ஜூஸில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே இது இயற்கையாகவே செரிமானத்திற்கு ஏற்றது. 

கூடுதலாக இதில் ஆல்டிஹைட், ஈஸ்டெராஸ் போன்ற செரிமான அமைப்பை மேம்படுத்தும் பொருட்கள் உள்ளன. இதில் விட்டமின் பி இருப்பது உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. 

இது இரைப்பைக் குடல் கோளாறுகளை சமாளிக்க உதவுகிறது. இது வயிற்று போக்கை தடுக்கவும் உதவுகிறது.

​நீரிழிவு நோயை எதிர்த்து போராட உதவுகிறது

​நீரிழிவு நோயை எதிர்த்து போராட உதவுகிறது

நீரிழிவு நோய் மற்றும் உயர் சர்க்கரை அளவை எதிர்த்து போராட உதவுகிறது. இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவுகிறது. 

மேலும் மாம்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இன்சுலின் அளவை எந்த வகையிலும் இது பாதிக்காது. தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது

எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்கிறது.

எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்கிறது.

உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சரியான சமநிலை க்கு கொண்டு வர உதவுகிறது.

அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதற்கும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதற்கும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. 

எலக்ட்ரோலைட்டுகள் உடலில் சரியான pH மற்றும் திரவ சமநிலையைச் சீராக்க உதவுகிறது. 

உடற் சோர்வை நீக்குகிறது. எலக்ட்ரோலைட் குறைப்பாட்டை போக்கி பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது.

​நோய்களை எதிர்த்து போராடுகிறது

​நோய்களை எதிர்த்து போராடுகிறது

பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. 

சிட்ரிக், ஆக்சாலிக் மற்றும் மாலிக் அமிலங்களைக் கொண்ட இது பித்த சுரப்பை ஊக்குவிக்கிறது. 

இது சிறுநீர்க்குழாய், மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் கோளாறுகள் போன்ற நோய்களைக் குணப்படுத்த குடல் கிருமி நாசினியாக செயல்படுகிறது. 

இது நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்மை தாக்கும் நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.

​விட்டமின் சி

​விட்டமின் சி

மாம்பழத்தில் ஏராளமான அளவிற்கு விட்டமின் சி காணப்படுகிறது. இது பல்வேறு வகையான இரத்த சம்பந்தமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது. 

இது புதியவர்கள் இரத்த செல்கள் உருவாக்கத்தை அதிகரிக்கவும், இரத்த நாளங்களின் நெழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. 

சில ஆரோக்கியமற்ற இரத்த போக்குகளைத் தடுக்கவும் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இரத்த அணுக்களுக்குள் இரும்பு உறிஞ்சுதலைத் தூண்டவும் உதவுகிறது.

எனவே ஹூமோ குளோபின் பற்றாக்குறை இருப்பவர்கள் தாராளமாக மாம்பழ ஜூஸை எடுத்துக் கொள்ளலாம்.

​மாம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன

​மாம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன

மாம்பழத்தில் விட்டமின் ஏ, கால்சியம், மக்னீசியம், மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைய காணப்படுகிறது. 

இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது மேலும் விட்டமின் சரும பாதிப்பு பிரச்சினைகளை களைய உதவுகிறது. 

இதிலுள்ள பீட்டா கரோட்டீன் மற்றும் விட்டமின் ஏ போன்றவை சருமத்தை புதுப்பிக்கவும் சரும பாதிப்பை சரி செய்யவும் சருமத்திற்கு பொலிவைத் தரவும் உதவுகிறது.

​குடல் கோளாறுகளை மேம்படுத்துகிறது

​குடல் கோளாறுகளை மேம்படுத்துகிறது

மாம்பழத்தில் பெக்டின் என்னும் பொருள் காணப்படுகிறது. இது இரைப்பை உள் கோளாறுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. 

இதிலுள்ள பொருட்கள் ஹீட்டோரோபோலிசாக்கரைடு, பெக்டின் தேன் அல்லது உப்புடன் கலக்கும் போது, இது நாள்பட்ட டிஸ்ஸ்பெசியா, 

வயிற்றுப்போக்கு, மூலநோய்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பல்வேறு குடல் பிரச்சினைகளுக்கு இயற்கையான சிகிச்சையாக உதவுகிறது.

​புற்றுநோயை தடுக்க உதவுகிறது

​புற்றுநோயை தடுக்க உதவுகிறது

மாம்பழத்தில் அதிகளவு விட்டமின் சி காணப்படுகிறது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்களான குர்செடின், 

மெத்தில் கேலேட், ஃபிசெடின், ஐசோகுவெர்சிட்ரின், அஸ்ட்ராகலின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகின்றன. 

இது பல்வேறு வகையான புற்றுநோயில் இருந்து உங்க உடலை பாதுகாக்க உதவுகிறது. 

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் பெருங்குடல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், லுகேமியா மற்றும் மார்பக புற்று நோய் என பலவற்றில் இருந்து சிகிச்சை அளிக்கிறது.

​மனச்சோர்வை குறைக்கிறது

​மனச்சோர்வை குறைக்கிறது

இது மனச்சோர்வை குறைக்க உதவுகிறது. இது ஒருவரின் செறிவு திறனை அதிகரிக்கிறது. இதிலுள்ள வைட்டமின் பி 6, காமா-அமினோ ப்யூட்ரிக் அமிலத்தின் உற்பத்திக்கு உதவுகிறது. 

இது மத்திய நரம்பு மண்டலத்தை ஒரு நரம்புக்கடத்தியாக செயல்பட வைப்பதற்கு அவசியமானது. இது மனதை நிம்மதியாக உணர வைக்க உதவுகிறது. 

இதிலுள்ள குளுட்டமைன் நம்முடைய கவனம் செலுத்தும் திறன் அதிகரிக்கிறது. அதே மாதிரி நினைவக சக்தியை அதிகரிக்கிறது.

​கண்களுக்கு சிறந்தது

​கண்களுக்கு சிறந்தது

மாம்பழத்தில் விட்டமின் ஏ அதிகளவில் காணப்படுவது நம் கண்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தருகிறது. இது கண்களில் ஏற்படும் வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது. 

உலர்ந்த கண்கள், கண் புரை மற்றும் குருட்டுத்தன்மை போன்ற நோய்களில் இருந்து கண்களை பாதுகாக்க உதவுகிறது. 

இது ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற ப்ளவனாய்டுகளை அளிக்கிறது. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

​கர்ப்பம் மற்றும் அனிமியாவுக்கு உதவுகிறது

​கர்ப்பம் மற்றும் அனிமியாவுக்கு உதவுகிறது

மாம்பழம் போலேட் நிறைந்த வளமான மூலமாகும். இது பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.

கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தை நன்றாக வளர உதவி செய்கிறது.

மாம்பழத்தில் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே அனிமியா போன்ற இரும்புச் சத்து குறைப்பாட்டை சந்திப்பவர்களுக்கு இது சிறந்து விளங்குகிறது. 

இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி போன்றவை வலுவான பற்களையும் வலுவான ஈறுகளையும் உறுதி செய்கிறது.

​​பழுக்காத மாம்பழம் ஜூஸ் இதர பயன்கள்

​​பழுக்காத மாம்பழம் ஜூஸ் இதர பயன்கள்

இந்த பச்சை நிற மாம்பழ ஜூஸ் புத்துணர்ச்சி ஊட்டும் பானமாக வீடுகளிலும் உணவகங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது வீட்டில் தயாரிக்கப்படும் கோடை கால பானங்களில் ஒன்றாகும். 

தற்போது இந்த பச்சை நிற மாம்பழ ஜூஸ் கடைகளில் கிடைத்தாலும் அதை வாங்கி உட்கொள்ளாதீர்கள். 

ஏனெனில் அதில் நிறைய சர்க்கரை சேர்க்கப்படலாம். எனவே பழுக்காத மாம்பழங்களை வீட்டிலேயே ஜூஸ் தயாரித்து சாப்பிடுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)