தென்னிந்திய குடும்பங்கள் அனைத்தும் எப்போதும் விரும்பி சாப்பிடும் டிபன் என்றால் அது இட்லி, தோசை தான். இருப்பினும் இவற்றை சாதாரணமாக செய்வதை விட, சற்று வித்தியாசமாகவும், சத்தான முறையிலும் செய்து சாப்பிடலாம்.
காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது.
சுவையை தூண்டும் மட்டன் கறி செய்வது எப்படி?
தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ் (ulcerative colitis) மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்க முடியும்.
காலிஃப்ளவர் - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
புதினா இலை - 1 மேஜைக் கரண்டி
கொத்தமல்லி இலை - 2 மேஜைக் கரண்டி
பூண்டு - 3 பல்
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 3 சிட்டிகை
இஞ்சி - 2 அங்குலம்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 மேஜைக் கரண்டி
பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கி அந்த வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் !
தோசைக்கு தேவையான பொருட்கள்
தோசை மாவு - தேவையான அளவு
காலிஃப்ளவர் மசாலா - தேவையான அளவு
சிகப்பு மிளகாய் - 6
பூண்டு - 15 பல்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
இதய வால்வு பாதிப்புக்கு சிகிச்சை செய்வது !
பூண்டை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை கரகரப்பாக தட்டிக் கொள்ளவும். காலிஃப்ளவரை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து, கரகரப்பாக மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அதன்பின் கொத்தமல்லி இலை, புதினா இலை போட்டு வதக்கவும்.
காலிஃப்ளவர் அரைத்தது போட்டு, தனியாத்தூள் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் கரம்மஸாலாத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு இவற்றைப் போட்டு வதக்கி, இறக்கி வைத்துக் கொள்ளவும்.
தோசை செய்முறை
சிகப்பு மிளகாயை 30 நிமிடங்கள் ஊற வைத்து, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லைக் காய வைத்து, தோசைமாவை பரவலாக ஊற்றவும். சுற்றிலும் நல்லெண்ணெய் ஊற்றவும்.
சன் ஸ்ட்ரோக் என்பது சாதா விஷயமல்ல... வெயிலில் அலையாதீங்க !
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் சிவந்ததும் மறுபடியும் முன்பக்கம் திருப்பவும். இதன் மீது அரைத்து வைத்துள்ள மிளகாய் பூண்டு கலவையை பரவலாகத் தடவவும்.
இதன்மீது காலிஃப்ளவர் மஸாலாவை பரவலாக வைக்கவும். தோசையை இரண்டாக மடித்து, எடுத்து பரிமாறவும்.