க்ளியர் சிக்கன் மஷ்ரூம் சூப் செய்வது எப்படி?





க்ளியர் சிக்கன் மஷ்ரூம் சூப் செய்வது எப்படி?

0

வீடுகளில் காளான் சமைக்கும் போது நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கேள்விகள் எழக்கூடும். இது சைவமா? அசைவமா என்பதில் தொடங்கி இதை எப்படிச் சுத்தம் செய்வது? 

க்ளியர் சிக்கன் மஷ்ரூம் சூப் செய்வது எப்படி?
எப்படி வேக வைப்பது? இதை எண்ணெயில் பொரித்தால் சத்துக்கள் கெட்டு விடுமா? இதை தினமும் சாப்பிடலாமா? எவ்வளவு நேரம் சமைக்க வேண்டும்? 

இது ஜீரணமாவது கடினமா? என்பது போன்ற கேள்விகள் நமக்குள் தொடர்ந்து எழுந்து கொண்டே தான் இருக்கின்றன.  வாணலியில் எண்ணெய் அல்லது உருகிய வெண்ணெய் சூடானதும், காளான்களைச் சேர்க்கலாம். 

காளான்கள் போதுமான அளவு உலரவைக்கப் படாது இருந்தால் காளான்கள் வதக்கப் படுவதற்குப் பதிலாக தண்ணீர் வெளியேறி ஆவியில் வேகத் தொடங்கும். 

பொதுவாக காளான்களை 4 முதல் 5 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். 

கொசு ஏன் மனிதனை கடிக்கிறது?

அதாவது காளான்களை வாணலியில் இட்டதும் அவை மென்மையாக வதங்கி லேசாக பழுப்பு நிறமாக மாறினால் போதும், அந்தப் பதத்தில்க் காளான்கள் உண்ணத் தக்கவையாக மாறி விடும். 

காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப் படுத்துகிறது. 

பற்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிறந்த உணவு காளானாகும். காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது.

தேவையானவை :

கோழிக்கறித் துண்டுகள் (எலும்பு இல்லாதது) - 400 கிராம்

டார்க் ஸோயா ஸாஸ் (Dark Soya Sauce) - 1 மேஜைக் கரண்டி

மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

வறுகடலை - 1 மேஜைக் கரண்டி

நல்லெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி

பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 அங்குலம்

மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி

கோழிக்கறி வேக வைத்த தண்ணீர் (சிக்கன் ஸ்டாக்) - 6 கப்

நறுக்கிய லெமன் க்ராஸ் - 1 மேஜைக் கரண்டி

வேக வைத்த அரிசி - 50 கிராம்

சுத்தம் செய்து நறுக்கிய காளான் - 75 கிராம்

வெங்காயத்தாள் - 4

உப்பு -  தேவையான அளவு

கருவாடு எல்லாரும் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும்?

செய்முறை :

க்ளியர் சிக்கன் மஷ்ரூம் சூப் செய்வது எப்படி?

கோழிக்கறித் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும். வெங்காயத் தாளை 2 அங்குல நீளத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதன்பின் இஞ்சி போட்டு வதக்கி, சிக்கன் ஸ்டாக் ஊற்றவும். 

அதன் பின் கோழிக்கறித் துண்டுகள், லெமன் க்ராஸ் போட்டு மூடி வேக வைக்கவும். கோழிக்கறி வெந்த பிறகு வேக வைத்த சாதம், காளான், வறுகடலை, டார்க் ஸோயா ஸாஸ், வெங்காயத்தாள், இவற்றைப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
ஆரோக்யம் தருவது சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?

லெமன் க்ராஸை எடுத்து விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப் கிண்ணங்களில் ஊற்றி, பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)