கொத்தவரங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. கொத்தவரையின் இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க வல்லவை.
தினமும் 10 கிராம் கொத்தவரங்காய் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் என்றும் ஆய்வுகள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. இதனால் நீரிழிவு நோயிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும்.
கர்ப்பிணி பெண்கள் நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் சாப்பிட்டால் கருவின் ஆரோக்கியம் நன்கு மேம்படும்.
கொத்தவரங்காயில் அதிகம் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து இருப்பதால் இது இதயத்திற்கு நல்ல பலத்தை அளிக்கிறது. ஆஸ்துமா பிரச்சினையைக் குணமாக்கும் ஆற்றல் கொத்தவரங்காய்க்கு உண்டு.
கொத்தவரங்காய் ஒரு வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. உடலில் உள்ள நரம்புகளை வலுப்படுத்தும் சக்தி கொத்தவரங்காய்க்கு உண்டு. சரியாக ஜீரணமாகாவிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படலாம்.
அதற்கு கொத்தவரங்காய் சமைத்து சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சினைகளை சரி செய்து மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கும்.
கொத்தவரங்காய் அடிக்கடி சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்கின்றனர். ஏனெனில் இது இதயத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியதாம்.
வாரத்திற்கு இரண்டு முறை, உங்கள் உணவில் கொத்தவரங்காய் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான அளவு கால்சியம் சத்து கிடைக்கும் என்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் எல்லாம் வலுவடையும்.
கொத்தவரையின் செடி வலி நிவாரணியாகவும், கிருமி நாசினியாகவும், ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டுவலிக் குறைப்பானாகவும்,
கட்டிகளைக் கரைப்பானாகவும் புண்களை ஆற்றியாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் தன்மைகளைப் பெற்றுள்ளன.
உணவில் கொத்தவரங்காயை சேர்த்து கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது. இப்போது சத்து நிறைந்த கொத்தவரங்காய் மசாலா எப்படி செய்வது? என்று பார்ப்பொம்.
தேவையான பொருட்கள் :-
நறுக்கிய கொத்தவரங்காய் – கால் கிலோ
மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
சர்க்கரை – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்தேங்காய் துருவல் – 1 கப்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்
வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :-
கொத்தவரங்காயை காய் முழுகும் வரை தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
சத்து நிறைந்த ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி?
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அவற்றுடன் கொத்தவரங்காயை சேர்த்து வதக்கவும். பின்பு மிளகாய் தூள், வேர்க்கடலை தூள், தேங்காய், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.
நன்றாக வெந்தவுடன் இறக்கவும். இப்போது சுவையான கொத்தவரங்காய் மசாலா தயார்.