காளான் நிறைய பேர் விரும்பி சாப்பிடுவார்கள். சிலருக்குப் பெரிதான அதன் சுவை பிடிக்காது. காரணம் அதிலிருந்து வரும் வாசனை மற்றும் குறிப்பிட்ட சுவை எதுவும் இல்லாமல் இருப்பது.
மஞ்சூரியன், சூப் போன்றவற்றைத் தவிர பெரிதாக நாம் வீடுகளில் அதை நாம் அடிக்கடி சமைத்து சாப்பிடுவதில்லை. மிக அரிதாகவே வீட்டில் சமைத்து சாப்பிடுவதுண்டு. ஆனால் அடிக்கடி சாப்பிட வேண்டிய காய்கறிகளில் ஒன்று இந்த காளான்.
விக்கலை நிறுத்த சில வழிகள் ?
காளான்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு நன்மைகளையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, குறிப்பாக அவை பீட்டா-குளுக்கன்களை கொண்டிருப்பதால் பல நன்மைகளை அளிக்கிறது.
எனவே, பெரும்பாலான உணவுகளைப் போலவே ஊட்டச்சத்து அடர்த்தியான, காளான்களும் ஆரோக்கியத்தை அளிக்கின்றன. காளான் மிக உயர் அடர்த்தி கொண்ட இரண்டு ஆன்டி ஆக்சிடென்ட்களைக் கொண்டுள்ளது.
அவை எர்கோத்தியோனின் மற்றும் க்ளுட்டத்தின் ஆகியவை. இந்த இரண்டு ஆன்டி ஆக்சிடென்ட்கள் ஒன்றாக இருக்கும் போது அவை கடுமையாக உழைத்து
உடல் சார்ந்த அழுத்தங்களை போக்கி வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளான சுருக்கம் போன்றவற்றை வர விடாமல் தடுத்து உடலை பாதுகாக்கிறது.
உங்கள் இளமையைத் தக்க வைக்கிறது. தமிழ்நாட்டில் பள்ளிப்பாளையம் ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானது. பள்ளிப்பாளையம் என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ளது.
இந்த பள்ளிப்பாளையம் ரெசிபிக்களில் காளான் ப்ரை மிகவும் சூப்பராக இருக்கும். பள்ளிப்பாளையம் காளான ப்ரை சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, புல்கா, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
நெஞ்செரிச்சலை எளிமையாக தடுப்பது எப்படி?
குறிப்பாக இந்த காளான் ப்ரை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு பள்ளிப்பாளையம் காளான் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
காளான் - 200 கிராம்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
தேங்காய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கிய காளான் மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
அசைவ உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ஆபத்து !
காளான் நன்கு வெந்ததும், இறக்கி மேலே சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது மிளகுத் தூள் தூவி இறக்கினால், சுவையான பள்ளிப்பாளையம் காளான் ப்ரை தயார்.