வடுமாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?





வடுமாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். 

வடுமாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
நீங்கள் உலகின் எந்தஒரு மூலை முடுக்கிலிருந்தும் உள்ள இந்தியரிடம் கேட்கலாம். உணவு சாப்பிடும் பொது சிறிய துண்டு ஊறுகாய் இல்லாமல் அவர்களின் நாள் நிறைந்ததாக இருக்காது என்று சொல்வார்கள். 

நீங்கள் ரோட்டுக் கடைகளில் சாப்பிடும் ஆர்வம் உள்ளவரா?

மா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும். மாவடு எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. காயும் சரி, அதன் நீரும் சரி மணமும் சுவையும் அபாரமானது.கட்டித் தயிரும், மாவடுவும் சரியான காம்பினேஷன்.

தேவையான பொருட்கள்:

மாவடு - 1 லிட்டர்

(அரைப் படி),

கல் உப்பு - 100 கிராம்,

காய்ந்த மிளகாய் - 10 கிராம்,

கடுகு - 20 கிராம்,

மஞ்சள் பொடி,

எண்ணெய் - தலா 1 டீஸ்பூன்.

செய்முறை:

வடுமாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

உருண்டை மாவடுவைத் தேர்ந்தெடுத்து, நன்கு கழுவி, ஈரம் போகத் துடைக்கவும். காய்ந்த மிளகாய், கடுகு, மஞ்சள் பொடி, உப்பு இந்த நான்கையும் விழுதாக அரைக்கவும்.

மாவடுவில் சிறிது எண்ணெய் விட்டு நன்றாகத் தடவி, பின் இந்த விழுதையும் போட்டு நன்றாகக் குலுக்கி ஜாடியில் போட்டு வைக்கவும்.

அவ்வப்போது எடுத்து, ஓரிரு முறை குலுக்கி, மீண்டும் வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து, ஜாடியின் மேல் ஒரு மெல்லிய துணியைக் கட்டி, 2 நாள் வெயிலில் வைத்து எடுக்கவும்.

வெயில் காலம் இருக்கும் வரை அவ்வப்போது வெயிலில் வைத்து எடுத்தால், ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும். மாவடு ( உப்பு மூலம் ) நீர் விடும் என்பதால் மாவடு மூழ்கும் அளவு தண்ணீர் அதிலிருந்தே கிடைத்து விடும்.

உடல் பருமன் என்றால் என்ன?

குறிப்பு:

ஊறுகாயை எடுக்க நீளமான மரக் கரண்டியையே எப்போதும் உபயோகித்தால், ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு வரும்.

Tags: