சுவையான தந்தூரி கோபி செய்வது எப்படி?





சுவையான தந்தூரி கோபி செய்வது எப்படி?

0

காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது. புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது. 

சுவையான தந்தூரி கோபி

செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகள் விளையும். 

மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புசக்தி அதிகமாக உள்ளது. 

குஜராத்தி மசாலா உருளைக்கிழங்கு செய்வது எப்படி?

புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. 

சரி இனி காலிபிளவர் பயன்படுத்தி சுவையான தந்தூரி கோபி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை:

நடுத்தர சைஸ் காலிஃப்ளவர் – ஒன்று

உப்பு – தேவையான அளவு

ஊற வைக்க :

தயிர் – அரை கப் (துணியில் கட்டி தொங்க விட்டுத் தண்ணீரை வடிகட்டவும்)

கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்

காஷ்மீர் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

சாட் மசாலாத் தூள், கரம் மசாலாத் தூள் – தலா ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

கசூரி மேத்தி (உலர் வெந்தயக்கீரை) – ஒரு டேபிள் ஸ்பூன்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

வெண்ணெய், உப்பு – தேவையான அளவு

ஓட்ஸ் காய்கறி சூப் செய்வது எப்படி?

செய்முறை:

சுவையான தந்தூரி கோபி செய்வது எப்படி?

அவனை (oven) ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவவும். ஊற வைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். 
வெறும் வயித்துல இதெல்லாம் சாப்பிடால் கஷ்டப்படுவீங்க !

காலி ஃப்ளவரை இலைகள் நீக்கி, நன்கு கழுவி, பேப்பர் டவல்கொண்டு ஈரத்தை ஒத்தி எடுக்கவும். 

கட்டிங் போர்டில் காலிஃப்ளவரைத் தலைகீழாக வைக்கவும். கூர்மையான கத்தியால் `V’ போல கட் செய்து நடுத்தண்டை நீக்கவும் 

(மிகவும் ஆழமாக கட் செய்யக் கூடாது; பூக்கள் தனித் தனியாகப் பிரிந்து விடக் கூடாது).

இந்த காலிஃப்ளவரை பேக்கிங் பாத்திரத்தில் நேராக நிமிர்த்தி வைக்க முடியும். காலி ஃப்ளவர் மீது பிரஷ்ஷால் நெய் தடவி, மேலே பரவலாக உப்பு தூவவும். 

அதன் மீது ஊற வைத்த தயிர்க் கலவையைத் தடவவும். 

காலி ஃப்ளவரை பேக்கிங் பாத்திரத்தில் வைத்து, பாத்திரத்தை அவன் உள் வைத்து, 180 டிகிரி செல்ஷியஸில் 45 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும்.

பிரைட் சில்லி இட்லி செய்வது எப்படி?

(வெந்து விட்டதா என்று கத்தியைச் செருகி, சோதித்துப் பார்த்துப் பிறகு வெளியே எடுக்கவும்). ஐந்து நிமிடங்கள் கழித்து சாதம், கிரேவியுடன் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)