எந்த கீரையில் சத்து அதிகம் உள்ளது? தெரியுமா?





எந்த கீரையில் சத்து அதிகம் உள்ளது? தெரியுமா?

0

குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒரு வித வெறுப்பு இருக்கும். ஏன் என்ற காரணம் எல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் கீரையை உணவாக சாப்பிடுவது, மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்து தான் சாப்பிட்டிருப்போம்.

எந்த கீரையில் சத்து அதிகம் உள்ளது? தெரியுமா?
நம் அன்றாட உணவில் கீரையை சேர்த்து உண்டால், நம் உடம்பிற்கு தேவையான அணைத்து வகையான சத்துக்கள் வந்து சேர்ந்து விடும். 

கடுகில்லாமல் சாம்பார் சுவை பெறாது... கடுகு வகைகள் எத்தனை?

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கீரைகள் ஒரு மிக பெரிய பிரசாதம். கீரைகளில் கலோரியும் புரதமும் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் நன்றாகவே கீரைகளை உட்கொள்ளலாம். 

சர்க்கரை நோயாளிகள் மற்றுமின்றி வயோதியர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் உணவில் சேர்த்தால் மிக்க நல்லது.

கீரைகளில் நார் சத்து அதிகம் உள்ளத்தால், கீரைகளை சாபிட்டவுடன் தண்ணீர் சேர்த்துக் கொள்வது மிக அவசியம்.

நமக்கு தேவையான வைட்டமின் சி கீரைகளில் அதிகம் உள்ளது. கீரைகளை அதிக நேரம் வேக வைப்பதால் அதில் உள்ள வைட்டமின் சி ஆவிஆகி கரைந்து விடும். 

ஆயுளை நீட்டிக்கும் அதிசயப் பொருள் சீந்தில் கொடி மருத்துவ பயன்கள் !

கீரைகளை சமைத்த பின்னர் அதில் எலுமிச்ச சாறு கொஞ்சம் பிழிந்து சாப்பிட்டால், அதில் உள்ள இரும்பு சத்தை நம்மால் கிரகித்துக் கொள்ள முடியும். 

விளை நிலங்களை பொருத்து கீரைகளின் தன்மையும், ருசியும் மாறுபடும். முக்கியமாக கீரைகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை : 

எந்த கீரையில் சத்து அதிகம் உள்ளது? தெரியுமா?

உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன. 

நம் உடலுக்கு தேவையான இரும்பு சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாது சத்துக்கள், வைட்டமின்கள் பி1, பி2, பி6 மற்றும் சி, இ, கே ஆகியவை கிடைக்கின்றன.

எலுமிச்சை கலந்த தண்ணீர் அருந்துவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் !

கீரைகளில் உள்ள கரோட்டினாய்கள் வைட்டமின் ஏ - வாக மாற்றப்பட்டு உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் பாகங்கள் புத்துணர்ச்சியுடன் செயலாற்ற உதவுகிறது. 

நம் உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளும் முளைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை அவைகளில் எது சத்து மிக அதிகம் என்பதை கிழே இனி பார்போம்.

சிறுகீரை:

எந்த கீரையில் சத்து அதிகம் உள்ளது? தெரியுமா?

கலோரி, புரதம், பாஸ்பரஸ் : குறைவான அளவில் இருக்கிறது..

கால்சியம் : ஓரளவுக்கு கால்சியமும் உண்டு.

இரும்புச்சத்து : அதிகம் இருக்கிறது.

பீட்டா கரோட்டின், நார்ச் சத்துக்கள்: உண்டு.

சிறுகீரையை சிறு பருப்புடன் சேர்த்து அணைத்து வயதினரும் சாப்பிடலாம்.

பாலக்கீரை:

எந்த கீரையில் சத்து அதிகம் உள்ளது? தெரியுமா?

கால்சியம், பாஸ்பரஸ் : குறைவான அளவில் இருக்கிறது.

இரும்புச்சத்து : குறைவான அளவில் இருக்கிறது.

பீட்டா கரோட்டின், சோடியம், பொட்டாஷியம்: ஓரளவு உண்டு.

ஆக்ஸாலிக் ஆசிட், யூரிக் ஆசிட், வைட்டமின் சி : அதிக அளவில் இருக்கிறது.

தைமின், ரிபோஃப்ளோமின் மற்றும் நார்ச்சத்து : ஓரளவுக்கு இருக்கிறது

பீட்டா கரோட்டின் : அதிக அளவில் இருக்கிறது.

வேக  வைத்து அரைத்தப் பாலக் கீரையை சப்பாத்திக்கு சைட்-டிஷ்ஷாக சாப்பிட நன்றாக இருக்கும்.

ஆப்கன் பெண்களின் நிலை... ஷரியத் சட்டம் என்ன சொல்கிறது?

குறிப்பு : ஆக்ஸாலிக் ஆசிட் மற்றும் யூரிக் ஆசிட் அதிக அளவில் இருப்பதால் சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

முளைக்கீரை:

எந்த கீரையில் சத்து அதிகம் உள்ளது? தெரியுமா?

கலோரி, புரதம், 

பாஸ்பரஸ் : குறைவான அளவில் இருக்கிறது.

கால்சியம் : அதிக அளவில் இருக்கிறது.

இரும்புச்சத்து : அதிகம் இருக்கிறது.

பீட்டா கரோட்டின், சோடியம், பொட்டாஷியம்: ஓரளவு உண்டு.

ஆக்ஸாலிக் ஆசிட் : அதிக அளவில் இருக்கிறது.

மனப் பதற்றம் (ANXIETY) என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

குறிப்பு : முளைக்கீரையை சிறுநீரகப் பிரச்னை, கல் அடைப்பு, அலர்ஜி இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)