சேனைக்கிழங்கு அல்லது யாம் (Elephant Foot Yam) மருத்துவ குணங்கள் நிறைந்த கிழங்கு வகைகளில் ஒன்றாகும். இவை ஸ்டார்ச் செறிந்தவை என்பதால், ஈரம் நிறைந்த உஷ்ணப் பிரதேசங்களில், இக் கிழங்குகள், பரவலாக பயிரிடப்படுகின்றன.
இந்த கிழங்குகள் உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்குகளைப் போல பயன்படுத்தப் படுகின்றன.
ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை இக்கிழங்கு கெட்டு விடாமல் இருக்கும் என்பதால் இதனை காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்து கிறார்கள்.
இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் யானைக்கால் கிழங்கு என்றும் இதை வழங்குகிறார்கள்.
மேற்கு ஆப்ரிக்காவிலும் நியூகிளியிலும் சேனைகிழங்குகள் முக்கியமான வேளாண்மை பொருட்கள். கி.மு. 8000 ஆண்டுகளில் ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் முதன் முதலாக பயிரிடப்பட்டன.
இன்று வரை இந்த பிரதேசங்களின் ஏழை, எளிய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் இந்தக்கிழங்குள் இன்றியமையாதவை.
மிருதுவான கிழங்கு
இது மிகுந்த காரம் உடையது. சாப்பிடும் போது வாய், தொண்டை முதலியவற்றில் ஒரு வித அரிப்பு ஏற்படும். ஆனால் அதிக மகசூல் கொடுக்க வல்லது.
கெட்டியான கிழங்கு
இவ்வகை கிழங்குகள் கெட்டியானவை. இதில் காரத்தன்மை கிடையாது. சதையின் நிறம் வெள்ளையாக அல்லது இளம் சிவப்பாக இருக்கும்
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
டயாஸ்கோரின் தவிர, இந்த இன கிழங்குகளில் ஸ்டீராய்டுகளான சபோஜெனிங்களும் உள்ளன. டயாஸ்கோரியா இன கிழங்குகளில், விட்டமின் சி, நார்ச்சத்து, விட்டமின் பி - 6, பொட்டாசியம், மங்கனீஸ் சத்துக்கள் உள்ளன.
கொலஸ்ட்ரால், கொழுப்புகள் மற்றும் சோடியம் குறைவு. விட்டமின் சி, நார்ச்சத்து, விட்டமின் பி 6 - இவை ஆரோக்கியத்தை பாதுகாப்பவை.
ஊட்டச்சத்து உண்மைகள்
100 கிராம் சேனைக்கிழங்கு பின்வரும் ஊட்டச்சத்தை வழங்குகிறது.
கலோரிகள்: 118 கலோரிகள்
நீர்ச்சத்து: 66 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள்: 25 கிராம்
கொழுப்பு: 1.5 கிராம்
புரதம்: 9.81 கிராம்
நார்ச்சத்து: 5.7 கிராம்
பொட்டாசியம்: 1208 மிகி
கால்சியம்: 20 மிகி
இரும்பு: 1.8 மிகி
மெக்னீசியம்: 82 மிகி
சோடியம்: 14.2 மிகி
துத்தநாகம்: 2 மிகி
தாமிரம்: 0.3 மிகி
பெண்களின் சத்து மாத்திரை
கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.
பெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது.
கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக்கூடிய இக்கிழங்கில் புரதம், தாது உப்புகள், மாவுச்சத்து, வைட்டமின் ஏ, ரைபோஃபிளவின், கால்சியம், இரும்பு, தயாமின், நிகோடினிக்கும் உள்ளன.
உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக்கின்றனர்.
உடலை வலுவாக்கும்
இதில் உள்ள கால்சியம் சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்து விடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.
'பி' குரூப் மாத்திரைகளைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரைக்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம். பஞ்ச காலத்தில் கை கொடுக்கும் சத்துணவும், மருந்தும் இதுவாகும்.
அதனால் தான் ஆப்பிரிக்கர்கள் சேனைக்கிழங்கை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையைச் சமாளிக்கிறார்கள்.
கால்நடைகளுக்கு உணவு
தென் அமெரிக்காவில் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கப்படுவதால் அவை ஊட்டத்துடன் நன்கு வளர்கின்றன.