சுவைமிக்க சுறா மீன் பொரியல் செய்வது எப்படி?





சுவைமிக்க சுறா மீன் பொரியல் செய்வது எப்படி?

0

தேவையானவை:

சுறா மீன் - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 20

பூண்டு - 10

மஞ்சள் தூள் - சிறிதளவு

தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

தீக்காயத்தால் ஏற்படும் தழும்புகளை குணமாக்குவது எப்படி?

செய்முறை:

சுவைமிக்க சுறா மீன் பொரியல் செய்வது எப்படி?
சுறா மீன் துண்டுகளை, நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, மீன் துண்டுகளைச் சேர்த்து சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். 

வெந்தபின் மீன் துண்டுகளை தனியே எடுத்து மீன் முள்ளினை நீக்கி விட்டு அதன் தசைப் பகுதியை உதிர்த்து தனியாக வைக்கவும். 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு (தட்டியது) 

பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், தேங்காய்த் துருவல் மற்றும் உப்பு சேர்த்து ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். 
அடிவயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள் !

இத்துடன் உதிர்த்து வைத்துள்ள மீனைச் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை நன்கு கிளறிப் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)