உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. நமது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கிய தேவையாக அமைவது புரதசத்து (Protein) ஆகும்.
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன.அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது.சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க பலரும் பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். உடலின் வளர்சிதை மாற்றத்தில் புரோட்டீன் சத்தின் பங்கு முக்கியமானது.
இது உடலின் வளர்ச்சிக்கு அடிப்படையானது. இதைக் கட்டுப்படுத்துவது அல்லது குறைப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
பாசிப்பருப்பு
நன்கு முதிர்தந்த பயறு வகைகளில் அதிக சத்துக்களும் குறைந்த ஈரப்பதமும் இருக்கும். விட்டமின் ஏ,பி,சி,ஈ, கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவும்.
பச்சை பயறு
உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து குறைய உதவியாக இருக்கும். கொண்டைக் கடலை: கொண்டைக் கடலையில் ஃபோலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிர சத்து அதிக அளவில் உள்ளன.
எனவே கொழுப்பு குறைவதுடன், இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.
கடலைப் பருப்பு
இதில் மற்ற பருப்பு வகைகளை விட இரண்டு மடங்கு புரதம் அதிகம் நிறைந்து இருப்பதால், உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் இதய நோய் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
துவரம் பருப்பு
மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.
உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும். துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது.
புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.
கொண்டைக்கடலை
உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். கொண்டைக் கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவது, ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும்.
மைசூர் பருப்பு
இந்த பருப்பின் முக்கிய சிறப்பு இதில் உள்ள நார்ச்சத்து. உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
புற்றுநோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்ல உதவும்.
சிவப்பு காராமணி
இதிலுள்ள விட்டமின்கள் மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை வலுவோடு வைக்க பெரிதும் உதவுகிறது.
தட்டை பயறு
சுவையிலும் மணத்திலும் வளமையாக உள்ளதோடு மட்டுமல்லாது, தட்டை பயறுகளில் பல வகையான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த கருப்பு நிற கண்களை கொண்ட பயறுகளில் கலோரிகளும் கொழுப்புகளும் குறைவாகவே உள்ளது. அதனால் உடல் எடையை குறைக்கும் டையட் திட்டத்தில் சேர்ப்பதற்கான சிறந்த உணவாக இது விளங்குகிறது.
தட்டை பயறுகளில் நார்ச்சத்து வளமையாக உள்ளதால், உடல் எடையை குறைக்க இது முக்கிய பங்கை வகிக்கிறது. அதற்கு காரணம் இதனை உட்கொள்ளும் போது, நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வை அளிக்கும்.
தட்டை பயறு குழம்பின் சுவைக்கு ஈடு இணை இல்லை. இதிலுள்ள நார்ச்சத்து, இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது.
பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால், தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.
உளுத்தம் பருப்பு
இது நாடு முழுவதும் உள்ள இந்தியர்களால் பரவலாகப் பயிரிடப்படுகிறது. உளுந்து ஏராளமான கனிமங்களையும், ஊட்டச் சத்துகளையும் கொண்டுள்ளது.
உளுந்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது.
அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பருப்பு பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்தும் தன்மையுடையது.