நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம் பெறும். கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது.
நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கறிவேப்பிலை இடம் பெற்றிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம்.
கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது. இதன் பழத்திலும் ஏறாளமான நன்மைகள் உள்ளன.
கறிவேப்பிலை - 5 கப்
நல்லெண்ணெய் - 150 மில்லி லிட்டர்கடுகு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 3 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சிகப்பு மிளகாய் - 10உப்பு - தேவையான அளவு
40+ உடனே செக் செய்து கொள்ளுங்கள்
செய்முறை :
ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்
இதே எண்ணெய்யில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகாய் இவற்றைப் போட்டு வறுத்து எடுக்கவும். புளியை ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
வேறு வாணலியில் கடுகு, வெந்தயத்தை வறுத்து (Dry Roast) எடுத்து வைக்கவும். கறிவேப்பிலை, வறுத்த பொருட்கள், பெருங்காயத்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
கனமான வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி, காய்ந்ததும் அரைத்த வைத்துள்ள கறிவேப்பிலை கலவையைப் போட்டு வதக்கவும்.
உடலை எப்பவும் ஆரோக்கியமாக வைக்கும் எலுமிச்சை.!
புளிக்கரைசல், உப்பு சேர்த்து, மிதமான தீயில் வைத்து வதக்கி, தொக்குப்பதம் வந்ததும் இறக்கி, ஆறியதும் பாட்டிலில் எடுத்து வைத்து தேவையான போது பயன்படுத்தவும்