நத்தைகள் இந்த கடல் உணவுகளை போல் ஒத்திருந்தாலும் நத்தை சாப்பிடுபவர்கள் கடல் நத்தையை விரும்புவதில்லை. பெரும்பாலும் வயல்களில் நிலங்களில் இருக்கும் நில நத்தைகள் தான் சாப்பிட உகந்தது என்று சொல்வார்கள்.
வித்தியாசமாக கத்திரிக்காய் இடியாப்பம் செய்வது எப்படி?
நத்தை - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
ப.மிளகாய் - 3
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
தேங்காய் விழுது - கால் கப்
கொத்த மல்லி - தேவையான அளவு,பிறகு ஓடுகளை உடைத்து நத்தையின் கறியை தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி கொள்ள வேண்டும்.
வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து நத்தை கறியினை சேர்த்து நன்றாக வதக்கவும். நத்தை கறியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கறியை நன்கு வேக விடவும்.
இனிப்பில் இருக்கும் அபாயம் என்ன?
கறி நன்கு வெந்த வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து குழம்பை இறக்கி அதில் பொடியாக நறுக்கிய கொத்து மல்லித் தளை தூவி இறக்கவும். இப்போது நத்தை கறி பரிமாறத் தயார்.