வெண்ணெய் சாப்பிடுவது, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது. ஏனெனில் இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக செயல்பட வழிவகுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பால், தயிர், வெண்ணெய், நெய் போன்ற பால் பொருட்கள் இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமானவை என்று சொல்லலாம். வாயில் கரையும் மென்மையான மற்றும் மணம் கொண்ட வெண்ணெய் அனைவருக்கும் பிடிக்கும்.
உணவுப் பொருட்களின் சுவையையும் வெண்ணெய் அதிகரிக்கும். கொழுப்புச் சத்து அதிகமாக இருந்தாலும், ஆரோக்கியமாகவும், அன்றாடப் பயன்பாட்டிற்கும் ஏற்றது.
சூடான ரொட்டி, சப்பாத்தி, ரொட்டியில் வெண்ணெய் தடவி சாப்பிட்டால்.. சுவையே வேறு. வெண்ணெயில் தாதுக்கள், வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் கே2, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளன. இது பல உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
குறிப்பாக இது சருமத்தை பராமரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், இதய நோய் வராமல் தடுக்கவும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், ஆரோக்கியமான கண் பார்வையை வளர்க்கவும் உதவும்.
சந்தையில் தரமில்லாத வெண்ணெய் நிறத்தில் கிடைக்கிறது. இதில் உடலுக்குத் தேவையில்லாத, ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பல கூறுகள் உள்ளன.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயநோய், உடல் பருமன் இல்லாமல் இருந்தால் ஓரளவு எடுத்துக் கொள்ளலாம். சரி இனி வெண்ணெய் பயன்படுத்தி அருமையான மஸ்டர்டு க்ரஸ்ட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
புற்றுநோயினைத் தடுக்கும் கேரட் !
தேவையான பொருள்கள் :
வெண்ணெய் - 600 கிராம்
புதினா இலைகள் - 150 கிராம்
மல்லித்தழைகள் - 120 கிராம்
கசுந்தி மஸ்டர்டு - 50 கிராம்
பிரெட் க்ரம்ப்ஸ் - 50 கிராம்
தைம் - 10 கிராம்
ரோஸ்மேரி - 10 கிராம்
பூண்டு - 20 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெண்ணெயோடு புதினா, மல்லி, தைம், பூண்டு போன்றவற்றை நன்கு கலந்து அடித்துக் கொள்ளவும். பட்டர் பேப்பரில் இந்தக் கலவையைக் கொட்டி. ஃப்ரீஸரில் வைத்து, க்ரஸ்ட் பதம் வந்த பிறகு, தேவையான அளவு எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.
ரோஸ்மேரி சுவையான பானங்களிலும் நல்ல மணம் நல்குவதற்கு இவை மேலோட்டமாக இடப்படுகின்றன. சமையலின் போது செய்யப்படும் உணவுகளில் இவை இணையும் நிலையால் அஜீரணம் அறவே அகலும்.
பசியைப் புகுத்தி நன்கு புசிக்க வைக்கும். வயிறு தொடர்பான பிணிப் பிரச்னைகள் விலகும். இன்னல் தீர்ந்து உடம்பு இன்ப சுகம் பெறும். ரோஸ்மேரி என்ற தாவரம் நறுமண (ஸ்பைசி) இனம் சார்ந்ததாகும்.
ருசியான கச்சா சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?
இதன் உலர்ந்த இலைகளைப் பக்குவப்படுத்திக் குடுவைகளில் இட்டு வைக்கும் பட்சம் வளமான வாசனை நாடி வரும். அரு மருந்தாகவும் ரோஸ்மேரி பயன்பட்டு வருகின்றது.
சரீரத்தில் தோல் அரிப்பு ஏற்பட்டால், இதன் இலைகளைக் கொஞ்சம் நீரிட்டு இலேசாக அரைத்து இதன் மீது தேய்த்துக் குளித்து வந்தால் குணம் பெறலாம்.