லெமன் கிராஸ் இறால் சூப் செய்வது எப்படி?





லெமன் கிராஸ் இறால் சூப் செய்வது எப்படி?

0

இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம். 

லெமன் கிராஸ் இறால் சூப் செய்வது எப்படி?
இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன.. 

இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. 

இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

தேவையானவை:

கோழிக்கறி வேக வைத்த தண்ணீர் (சிக்கன் ஸ்டாக்) - 6 கப்

சுத்தம் செய்த இறால் - 500 கிராம்

நறுக்கிய லெமன் க்ராஸ் - 2 மேஜைக்கரண்டி

கொத்தமல்லி தண்டு - 3

நார்த்தங்காய் இலை - 3

காளான் - 300 கிராம்

தக்காளி - 1

ஃபிஷ் ஸாஸ் - 4 மேஜைக்கரண்டி

தாய் சில்லி பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி

எலுமிச்சைச்சாறு -  5 மேஜைக்கரண்டி

வெங்காயத்தாள் (நறுக்கியது) - 2 மேஜைக்கரண்டி

நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 மேஜைக்கரண்டி

உப்புத்தூள் - அரை தேக்கரண்டி

கள்ளகாதல் என்றால் விரலை வெட்டி சாப்பிடும் தண்டனைகள் !

செய்முறை :

லெமன் கிராஸ் இறால் சூப் செய்வது எப்படி?
பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக்—ஐ ஊற்றி, தயாராக வைத்துக் கொள்ளவும். நார்த்தங்காய் இலையை சிறு துண்டுகளாக கிழித்து வைத்துக் கொள்ளவும்.

மனித உடல்களை சாப்பிடும் அகோரிகள் - அப்படியே ஷாக் ஆயிட்டேன் !

கொத்தமல்லி தண்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காளானை மிக மெல்லிய சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை 8 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இறாலின் மேல் கூடுகளை, சிக்கன் ஸ்டாக்குடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

5 நிமிடங்கள் கொதித்தபின் இறாலின் மேல் கூடுகளை எடுத்து விட்டு லெமன் க்ராஸ், கொத்தமல்லி தண்டு, நார்த்தங்காய் இலை இவற்றைப் போட்டு மறுபடியும் கொதிக்க வைக்கவும்.

5 நிமிடங்கள் கொதித்த பிறகு காளான், தக்காளி, இறால் இவற்றைப் போட்டு மேலும் 4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

அதிகாலையில் வேகமாக எழுவதற்கான சில வழிகள் !

அதிகமாக இறாலை வேகவிடக் கூடாது. அதன்பின் இறக்கி வைத்து தாய் சில்லி பேஸ்ட், ஃபிஷ் ஸாஸ், எலுமிச்சைச் சாறு, வெங்காயத் தாள், கொத்தமல்லி இலை போட்டு பரிமாறவும்.

ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)