தென்னிந்தியாவில் சமைக்கப்படும் சாம்பாரின் ருசி தனி தான். தென்னிந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் இது ஒவ்வொரு விதமாக தயாரிக்கப் படுகின்றது.
முருங்கைக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். அரைத்துவிட்ட வெங்காய சாம்பார் மிகவும் சிறப்பானது. மராத்தியர்களின் உணவான சாம்பார், தமிழ்நாட்டில் கிபி 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் மராத்திய அரசு காலத்தில் அறிமுகமானது
சரி இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பாம்பே சாம்பார் என்றும் அழைக்கப்படும் பாம்பே சட்னியை செய்யுங்கள்.
இந்த பாம்பே சாம்பார் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதுடன், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
கறி லீஃப் பிரான் செய்வது எப்படி?
உங்களுக்கு பாம்பே சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள இதைப் படித்து செய்து சுவைத்துப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - 1 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
மேட்டுப்பாளையம் மட்டன் குழம்பு செய்வது எப்படி?
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
உப்பு - சுவைக்கேற்பகறிவேப்பிலை - சிறிது
மார்பக காம்புகளைச் சுற்றி முடி இருக்கிறதா? அப்ப இத படிங்க !
செய்முறை:
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மையை போக்குவது எப்படி?
பின்பு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, வெல்லம் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், கடலை மாவை சேர்த்து கிளறி 4-5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்த மல்லியைத் தூவினால், பாம்பே சாம்பார் தயார்.