சுவையான வெந்தயக்கீரை தோசை செய்வது எப்படி?





சுவையான வெந்தயக்கீரை தோசை செய்வது எப்படி?

5 minute read

அதிகளவு சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது.

சுவையான வெந்தயக்கீரை தோசை செய்வது எப்படி?
வெந்தயம் கீரை மற்றும் வெந்தயம் உணவுப் பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. 

வெந்தயம் தமிழர்களின் சமையலில் தவறாமல் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப் பொருளாகும். 

சுவையான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி?

இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும் வெந்தயக் குழம்பு, 

வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வெந்தய கீரையில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, 

சோடியம், உயிர் சத்துக்கள், நிக்கோடினிக் அமிலம், கயோலின் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளது. இப்போது வெந்தயக்கீரை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !

தேவையான பொருட்கள் :

வெந்தய கீரை – 2 கப்,

வெங்காயம் – 1

ப.மிளகாய் – 1

தோசை மாவு – தேவையான அளவு,

தேங்காய் துருவல் – சிறிதளவு,

நெய் – சிறிதளவு

உப்பு – தேவைக்கு

செய்முறை :

சுவையான வெந்தயக்கீரை தோசை செய்வது எப்படி?

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெந்தயக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் வெந்தயக் கீரையை போட்டு வதக்கவும்.

வெந்தயக்கீரை பாதியளவு வெந்ததும் அதில் தேங்காய் துருவல் சிறிது உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும். தோசை மாவில் வதக்கிய கீரையை போட்டு நன்றாக கலக்கவும்.

கடுகு எண்ணெய் தயாரிப்பது எப்படி?

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி சிறிது நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேண்டும். 

சூப்பரான சத்தான வெந்தயக்கீரை தோசை ரெடி. 

Tags:
Random Posts Blogger Widget
Today | 4, April 2025