கீரைகளில் வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இது நினைவாற்றலை அதிகரிக்கும் பண்புகளை அதிகம் கொண்டுள்ளன.
இந்த கீரை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். எப்போதும் காய்கறியைப் போட்டு சாம்பார் செய்து அழுத்திருந்தால், இந்த கீரை கொண்டு சாம்பார் செய்யுங்கள்.
மேலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இம்மாதிரியான கீரை சாம்பார் அடிக்கடி செய்வது, குழந்தைகளுக்கு நல்லது. சரி, வல்லாரை கீரை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறையை படித்து செய்து சுவைத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
உடலின் சக்தியை அதிகரிக்க உதவும் உணவு !
சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்து நறுக்கியது)
பூண்டு - 6 பல்
மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
வல்லாரை கீரை - 3 கப் (நறுக்கியது)
தண்ணீர் - தேவையான அளவு
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - சுவைக்கேற்ப
தீபாவளி கோதுமை அல்வா செய்வது எப்படி?
பருப்பு செய்வதற்கு...
துவரம் பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
ஸ்பெஷல் பால் அல்வா செய்வது எப்படி?
செய்முறை:
பின் புளியை நீரில் ஊற வைத்து, பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து, சிறிது உப்பு தூவி ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து, அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, 5-8 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வல்லாரை கீரை சாம்பார் தயார்.