கல்யாண முருங்கை தோசை செய்வது எப்படி?





கல்யாண முருங்கை தோசை செய்வது எப்படி?

0
நாம் எல்லோருக்கும் பரிச்சயமான முருங்கை மரமானது கீரைகளின் அரசன், கீரைகளின் முதல்வன், அதிசய மரம், வாழ்க்கை மரம், பிரம்மவிருட்சம் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. 
கல்யாண முருங்கை தோசை செய்வது எப்படி?
இது காலம் காலமாக மருத்துவ குணத்திற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் இருப்பதுடன், உடலை சீராக பராமரிக்க பல்வேறு வகையி்ல் உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.
முருங்கை இலைகளை உணவில் அன்றாடம் சேர்த்துக் கொண்டால், அதிலிருக்கம் குளோரோ ஜெனிக் அமிலம் போன்ற ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

உடலில் வயதானால் ஏற்படும் மூட்டு வலிகளுக்கு இயற்கை முறையில் தீர்வு கான, முருங்கையை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். முருங்கை இலையில் உள்ள Anti-Inflammatory அதற்கு பெரிதும் உதவுகின்றது.

டயாபடீஸ் என்னும் நீரழிவு நோய் உடைய நோயாளிகள், க‌ட்டாய‌ம் உணவில் முருங்கையை தினந்தோறும் சாப்பிட வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், அதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படும் என்று காரணம் கூறுகின்றனர். 

நீரழிவு நோய் நோயாளிகள் மறவாமல் உணவில் முருங்கையை சேர்த்துக் கொள்ள முயல்வது நல்லது என்றும் பரிந்துரைக்கின்றனர்.

முருங்கையை வீட்டுக்குப் பின்னாலும், கல்யாண முருங்கையை வீட்டுக்கு முன்னாலும் வளர்ப்பார்கள். பெண்மையைப் போற்றக் கூடிய மிகச்சிறந்த உணவு கல்யாண முருங்கை. 

இது, பெண்களுக்கான மாத விடாய்க் கோளாறுகளைச் சரி செய்யும். மாதவிடாய் சுழற்சியைச் சீராக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கும். 
ஆண்களுக்குச் சளியைக் குணப்படுத்தும். சைனஸ் மற்றும் தலை வலியைத் தீர்க்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். புளித்த ஏப்பத்தைச் சரி செய்யும்.

இதை, தோசையாகவும் சாப்பிடலாம். இதை வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இரண்டு அல்லது மூன்று தோசை என அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப்

இட்லிஅரிசி - 1 கப்

கடலைபருப்பு - 4 ஸ்பூன்

கல்யாண முருங்கை இலை - 1 கட்டு

உப்பு - தேவையான அளவு

காய்ந்த மிளகாய் - 4

பெருங்காயம் - சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

ஆண்கள் வயதுக்கு வரும் அறிகுறி என்ன? எப்படி தெரிந்து கொள்வது?

செய்முறை

கல்யாண முருங்கை தோசை செய்வது எப்படி?

கல்யாண முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கீரையை சுத்தம் செய்து நடுவில் உள்ள நரம்பை எடுத்து விடவும். பச்சரிசி, இட்லி அரிசி, கடலைபருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
டெல்டா மாவட்டம் என்றால் என்ன? #Delta District

பின்னர் கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும். பாதி அரைந்ததும் சுத்தம் செய்த கீரை, வற்றல், பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.

அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சத்தான கல்யாண முருங்கை தோசை ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)