கடல் மீனுக்கும் ஆற்று மீனுக்கும் ஊட்டச்சத்தில் உள்ள வித்தியாசம் என்ன?





கடல் மீனுக்கும் ஆற்று மீனுக்கும் ஊட்டச்சத்தில் உள்ள வித்தியாசம் என்ன?

0

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்து வெச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதய்யா... இந்தப் பாட்டை ரசிக்காத மீன் ரசிகர்கள் குறைவு. 

கடல் மீனுக்கும் ஆற்று மீனுக்கும் ஊட்டச்சத்தில் உள்ள வித்தியாசம் என்ன?
சிலருக்கு மீன் உணவுகளைப் பார்க்கும் போது மட்டுமல்ல, மீனைப் பற்றிப் பேசினாலே நாவில் எச்சில் ஊறத் தொடங்கி விடும்.

அந்த அளவுக்குப் பலரின் நாக்குடன் சேர்த்து மனதையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது 

மீனின் ருசி. இறைச்சியை விரும்பாத அசைவப் பிரியர்கள் கூட மீனை விரும்பக் காரணம் அதில் உள்ள தனிப்பட்ட சுவை தான்.

ஒரு தட்டில் சுடச்சுடச் சோற்றுடன் சூடான மீன் குழம்பும், அதற்குத் தொட்டுக் கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால் போதும்... 

மீன் பிரியர்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்தே போய் விடுவார்கள். 

மீனுக்கும் அதன் காதலர்களுக்கும் உள்ள ஆழமான பந்தத்தை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.

ஆடு, கோழி போன்றவற்றின் இறைச்சி சாப்பிடும் போது பலரும் குறிப்பிட்ட அளவு சாப்பிட வேண்டும், ஏனெனில் கொழுப்பு அதிகம் இருக்கிறது என்று சொல்வார்கள். 

கடல் மீனுக்கும் ஆற்று மீனுக்கும் ஊட்டச்சத்தில் உள்ள வித்தியாசம் என்ன?

ஆனால், மீன் இறைச்சியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளும் இல்லாததால், எல்லா வயதினருக்கும் மீன் ஒரு சிறந்த உணவு என்று சொல்லலாம். 

பாலூட்டும் தாய்மார்களுக்கு நன்கு பால் சுரக்க பால் சுறா மற்றும் நெய் மீன் போன்ற மீன்களை உணவாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். 

அது மட்டுமில்லாமல் மீன் உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கண் பார்வையையும் மேம்படுத்தும்.

மீன் உணவில் குழம்பு, வறுவல், புட்டு என்று பல வகைகள் இருப்பது போல மீன்களிலும் கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன் என்று பல வகைகள் உள்ளன. 

ஒவ்வொரு நீர் நிலைகளிலிருந்தும் கிடைக்கும் மீனுக்கென்று தனிப் பெயர்களும், தனி ருசியும் உண்டு. அது போல் அவற்றின் ஊட்டச் சத்துகளும் சிறிது மாறுபடும்.

கடல் மீனுக்கும் ஆற்று மீனுக்கும் ஊட்டச்சத்தில் உள்ள வித்தியாசம் என்ன?

மீன் உணவு அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது. கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்கள் போன்றவை வளர்வது வெவ்வேறு சூழலில் உள்ள நீர் நிலைகளில் தான் என்றாலும் 

அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். 

மீனில் புரதச் சத்து மிகவும் அதிகம், மற்றும் கொழுப்பு மிகவும் குறைவு. இதனால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஓர் உணவாக மீன் உள்ளது.

ஆற்று மீன் மற்றும் கடல் மீன் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன வென்றால் ஆற்று மீன், ஏரி மீன்கள் எல்லாம் 

ஆறு, குளம், ஏரிகளில் உள்ள புழு, பூச்சிகளை உணவாக உட்கொண்டு வளரும். 

ஆனால், கடல் மீன்கள் கடலில் வளரும் கடல்பாசிகளை உட்கொண்டு வளர்வதால் அவற்றில் ஒமேகா-3 போன்ற குறிப்பிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.

கடல் மீனுக்கும் ஆற்று மீனுக்கும் ஊட்டச்சத்தில் உள்ள வித்தியாசம் என்ன?

கடல்பாசிகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் (Fatty Acid), புரதச் சத்தும் அதிகம் உள்ளது. எனவே, இவற்றைச் சாப்பிட்டு வளரும் கடல் மீன்களிலும் ஒமேகா-3 உள்ளது. 

ஆனால், ஆற்று மீன்களில் இந்தக் கொழுப்பு அமிலம் காணப்படுவதில்லை. 

குறிப்பாகக் கடல் மீன்களில் பெரிய மீன்களை விடச் சிறிய மீன்களில் தான் இந்த ஒமேகா-3 நிறைந்துள்ளது. 

உதாரணமாக மத்தி, காணங்கெளுத்தி, சங்கரா போன்ற மீன்களில் ஒமேகா-3 அதிகம் உள்ளது.

இந்த ஒமேகா-3 உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் மிகவும் சிறந்தது. இது உடலில் ரத்தம் உறையாமல் பார்த்துக் கொள்கிறது. 

இதயம், மூளை போன்றவற்றின் ஆரோக்கியத்துக்கும், மூட்டு வலியால் அவதிப் படுவோருக்கும் இந்தக் கொழுப்பு அமிலம் ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது. 

மீன் எண்ணெய் மற்றும் மீன் மாத்திரைகள் இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலத்திலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் மத்தி, சங்கரா போன்ற ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்களில் இருந்து மீன் வாடை அதிகம் வருவதாலும், 

கடல் மீனுக்கும் ஆற்று மீனுக்கும் ஊட்டச்சத்தில் உள்ள வித்தியாசம் என்ன?

அவற்றில் முள் அதிகம் உள்ள காரணத்தாலும் பெரும்பாலானோர் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கின்றனர். 

உண்மையில் பெரிய மீன்களில் உள்ளவற்றைக் காட்டிலும் இவற்றில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. 

ஆற்று மீன்களோடு ஒப்பிடும் போது கடல் மீன்களில் சிறிது உப்பு அதிகமாக இருக்கும் என்பது உண்மை தான் என்றாலும் அவை உடல் ஆரோக்கியத்தை ஒரு போதும் பாதிக்காது.

இறைச்சி உணவுகளில் கொழுப்பு அதிகம் உள்ளது என்பதால் அதைச் சாப்பிடுவதில் உடல் நிலை காரணமாக சிலருக்கு வரையறைகள் இருக்கும். 

ஆனால், மீன்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருள்களும் இல்லை என்பதால் மீன் அனைத்து வயதினருக்கும் ஏற்ற, சிறந்த ஓர் உணவாக உள்ளது. 

பால் சுறா, நெய் மீன் போன்றவை பாலூட்டும் தாய்மார்களின் பால் சுரப்புக்கு உதவுகின்றன. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கின்றன. 

பொதுவாகவே மீன் உணவுகள் பார்வைத் திறனை மேம்படுத்தக் கூடியவை.

சிலருக்கு மட்டும் சில மீன் வகைகளால் ஏதாவது ஒவ்வாமை ஏற்படலாம். 

கடல் மீனுக்கும் ஆற்று மீனுக்கும் ஊட்டச்சத்தில் உள்ள வித்தியாசம் என்ன?

அவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் ஆறு, ஏரி, கடல் மீன்கள் என அனைத்து மீன்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி.

வாரத்தில் இரண்டு நாள்களாவது உணவில் மீன்களைச் சேர்த்துக் கொள்வது அவசியம். 

அதிலும் குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள மீன்கள் உணவில் தவறாமல் இடம்பிடிப்பது நலம்.

இப்போது இந்த ஒமேகா-3 உடலுக்கு நல்லதா இல்லையா என்ற ஒரு கேள்வி உங்களுக்கு இருக்கும். அதைப்பற்றி தெரிந்துக் கொள்வோம். 

ஒமேகா-3 ஊட்டச்சத்து உடல் வளர்ச்சிக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உடலில் இரத்த உறைவு பிரச்சினை ஏற்படாமல் கவனித்துக் கொள்கிறது. 

அது மட்டுமில்லாமல் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் மூட்டு வலியால் பாதிக்கப் படுபவர்களுக்கும் இந்த ஒமேகா-3 மிகச்சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 

இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலத்திலிருந்து தான் மீன் எண்ணெய் மற்றும் மீன் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

கடல் மீனுக்கும் ஆற்று மீனுக்கும் ஊட்டச்சத்தில் உள்ள வித்தியாசம் என்ன?

சிலருக்கு சில வகையான மீன்கள் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு. 

அவர்களைத் தவிர மற்ற எல்லோரும் அனைத்து வகையான மீன்களையும் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வாரத்தில் குறைந்தது இரண்டு வேளையாவது உங்கள் உணவில் மீன் இறைச்சியையும் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். 

உங்கள் உணவில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை சேர்ப்பது உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)