கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக காஜு கத்லி கேக் செய்வது எப்படி?





கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக காஜு கத்லி கேக் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : 
காஜூ கத்லி – 7-10 துண்டுகள்

க்ரீம் சீஸ் – 1 கப்

ராப்ரி – 1 கப்

சர்க்கரை – 1 கப்

முட்டை – 4

ஏலக்காய் பொடி – 2 டேபிள் ஸ்பூன்

மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்

நன்றாக அடித்த க்ரீம் - (அலங்கரிக்க)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக காஜு கத்லி கேக் செய்வது எப்படி?
ஒரு கேக் செய்யும் ஸ்பிரிங் பாட்டம் அச்சு பாத்திரத்தை எடுத்து அதில் சில்வர் தகடு பேப்பரை விரித்து அதன் மேல் சீஸ் கேக்கை வைக்க வேண்டும்.
இப்பொழுது ஒரு ஸ்ட்ரேயை எடுத்து அதில் சீஸ் கேக் வைக்கப்பட்ட அச்சு பாத்திரத்தை வைக்கவும். 

ஒரு தட்டு முழுவதும் காஜூ கத்லியை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது காஜூ கத்லியை சீஸ் கேக்கின் மேல் வரிசையாக வைக்க வேண்டும்.

ஒரு பெளலில் சீஸ் க்ரீமை எடுத்து கொள்ளவும் அதனுடன் ராப்ரியை சேர்க்கவும். அதனுடன் முட்டை, சர்க்கரை, மற்றும் ஏலக்காய் போன்றவற்றை சேர்க்கவும் இப்பொழுது அதனுடன் மைதா மாவை சேர்க்கவும்.

நன்றாக அடித்து கலந்து கொள்ளவும் இந்த க்ரீம் உள்ள கலவையை ட்ரேயின் மீது உள்ள காஜூ கத்லி மீது ஊற்றவும்.

இப்பொழுது அந்த ஸ்ட்ரேயில் மட்டும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கேக்கை 150 டிகிரி செல்சியஸ் அளவில் ஒரு மணி நேரத்திற்கு ஓவனில் வைத்து பேக் பண்ண வேண்டும்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக காஜு கத்லி கேக் செய்வது எப்படி?
பிறகு ஒரு மணி நேரம் கழித்து ஓவனிலிருந்து எடுக்க வேண்டும் அறை வெப்பநிலை வரும் வரை வெளியில் அப்படியே வைத்து இருக்க வேண்டும்
பிறகு அந்த கேக் அமைப்பை 2-3 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர்விக்க வேண்டும் பிறகு பிரிட்ஜிலிருந்து எடுக்கவும்  பிறகு கேக்கை மட்டும் அச்சுப் பாத்திரத்தில் இருந்து தனியாக எடுத்து துண்டுகளாக வெட்டவும்.

பிறகு கேக் துண்டுகளை ப்ரஷ் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும். ஒரு தட்டில் வைத்து பரிமாறவும். சுவையான காஜூ கத்லி மற்றும் ராப்ரி சீஸ் கேக் ரெடி
Tags: