தேகம் பொலிவு பெற மக்காச் சோளத்தின் மருத்துவம் அறிவோம்?





தேகம் பொலிவு பெற மக்காச் சோளத்தின் மருத்துவம் அறிவோம்?

0

தகிக்கும் செங்கனல்… துளிரும் வெண்புகை… சூடேறும் பச்சை சோளம்… நம்மை சுண்டி இழுக்கும் அற்புத உணவுச் சூழல் இவை.

தேகம் பொலிவு பெற மக்காச்சோளத்தின் மருத்துவம் அறிவோம்?

பெரும்பாலான மலை சுற்றுலா தலங்களில் மக்காச் சோளக் கடைகள் வீற்றிருப்பதைப் பார்க்க முடியும். 

மலையின் சில்லென்ற பனிமூட்ட சூழலுக்கு, சோளத்தின் சூடான ஆவி அக்மார்க் காம்பினேஷன் அல்லவா! 

அசைவ `பார்-பிக்யூ போல சைவ உணவுப் பிரியர்களுக்கான பார்-பி-க்யூவாக சுட்ட சோளத்தைச் சொல்லலாம்.

குளிருக்குத் தோதான சுவை

தேகம் பொலிவு பெற மக்காச்சோளத்தின் மருத்துவம் அறிவோம்?

பச்சை சோளத்தை முழுமையாக எடுத்து, உலர்ந்த சருகுகள் மற்றும் கரியின் உதவியுடன் தகித்துக் கொண்டிருக்கும் கனலில் சுட்டு, தங்க நிறத்தில் இருக்கும் சோளத்தின் மீது கறுப்பு நிறம் படிய வழங்கப்படும் 

சுட்ட சோளத்தின் சுவை அலாதியானது. மிளகாய்ப் பொடியில் பாதி வெட்டிய எலுமிச்சம் பழத்தைத் தோய்த்து, சுட்ட சோளத்தின் மீது தடவி, சூடு பறக்க சுவைக்கும் போது அடடா… குளிருக்கு தோதான சுவை அது! 

சோளத்தின் சருகுகளுக்குள் சுட்ட சோளத்தை வைத்து பற்களால் கடித்து ருசிப்பது சுற்றுலா சிற்றுண்டிகளின் ஸ்பெஷல்.

தங்கம் வார்க்கும் தச்சன்

தேகம் பொலிவு பெற மக்காச்சோளத்தின் மருத்துவம் அறிவோம்?

அதுவும் பச்சை சோளத்தை சுட்டுத் தரும் அழகு இருக்கிறதே… கனல் பொறிகள் பறக்க, தங்கத்தை வார்ப்பதைப் போல, தங்க நிறத்திலிருக்கும் சோளத்தை வார்த்துக் கொடுக்கும் நேர்த்தி அழகானது. 

பச்சை சோளத்தை சுட்டு சாப்பிடுவது தான் தனித்துவமான சுவையைக் கொடுக்கும். வேக வைத்து சுட்டு சாப்பிட்டால் அதன் தன்மையே மாறி விடும்.

சுட்ட சோளம் தவிர, வேக வைத்த சோளத்துக்கு தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. சுட்ட சோளத்தைப் பற்களால் கடித்துச் சுவைக்க முடியாதவர்கள் வேக வைத்த சோளத்தை நாடுகிறார்கள்.

மருத்துவப் பலன்கள்:

தேகம் பொலிவு பெற மக்காச்சோளத்தின் மருத்துவம் அறிவோம்?

மஞ்சள் சோளத்தில் உள்ள நிறமிச்சத்து, பார்வைத்திறனை அதிகரிப்பது மட்டுமன்றி, தேகத்திற்கு பொலிவைக் கொடுக்கவும் உதவுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் முதன்மை சிற்றுண்டியாக சோளத்தை நாடலாம். 

சிறுவர் சிறுமிகளுக்கு விருப்ப சிற்றுண்டியாகவும் சோளம் மாறும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்குப் பிடித்த மாதிரி சோளத்தை தயார் செய்து வழங்கலாம்.

உடல் ஆரோக்கியம் மேம்படும்

தேகம் பொலிவு பெற மக்காச்சோளத்தின் மருத்துவம் அறிவோம்?

மக்காச்சோளத்தில் சரியான அளவில் கார்போ ஹைட்ரேட் மற்றும் கலோரிகளை கொண்டது. மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். 

மேலும் பார்வைக் கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது.

இதய நலன் பாதுகாக்கப்படும்

தேகம் பொலிவு பெற மக்காச்சோளத்தின் மருத்துவம் அறிவோம்?

சோளம் குறைந்த அளவு கொழுப்பினை கொண்டது. இது இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் வராமல் உதவி புரிகிறது.

மலச்சிக்கலை தீர்க்கும்

தேகம் பொலிவு பெற மக்காச்சோளத்தின் மருத்துவம் அறிவோம்?

மக்காசோளம் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதம் மக்காசோளத்தில் நிறைந்து காணப்படுவதால் மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. 

இது அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தவிர்த்து, உணவு செரிமானமாக உதவி புரிகிறது.

மூல நோய் ஏற்படாமல் தடுக்கும்

தேகம் பொலிவு பெற மக்காச்சோளத்தின் மருத்துவம் அறிவோம்?

சோளத்தில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டால் நார்ச்சத்து முழுமையான அளவு நமது உடலுக்கு கிடைக்கும். 

இந்த நார்ச்சத்து மூல நோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

ரத்த ஓட்டம் சீராக இருக்கும்

தேகம் பொலிவு பெற மக்காச்சோளத்தின் மருத்துவம் அறிவோம்?

சோளத்தில் இருக்கும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. 

இதனால் ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் இதயத்திற்கு செல்லக்கூடிய நரம்புகள் போன்றவற்றில் கொழுப்புகள் படிந்து விடாமல் தடுத்து, சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கிறது.

இரத்த சோகை நீங்கும்

தேகம் பொலிவு பெற மக்காச்சோளத்தின் மருத்துவம் அறிவோம்?

பரம்பரை காரணம் மட்டுமல்லாமல் உடலில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாட்டாலும் ரத்தசோகை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. 

இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை பச்சையாகவோ அல்லது வேறு முறைகளிலோ சாப்பிட்டு வந்தால் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை குறைபாடு விரைவில் நீங்கும்.

உடல் எடை கூடும்

தேகம் பொலிவு பெற மக்காச்சோளத்தின் மருத்துவம் அறிவோம்?

சோளத்தில் கலோரி சத்துக்கள் அதிகம் உள்ளது 100 கிராம் சோளத்தில் 365 கலோரி இருக்கின்றது. சோளத்தில் இருக்கின்ற மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பொருட்கள் விரைவில் உடல் எடை கூடுவதற்கு உதவுகிறது. 

சராசரி உடல் எடையை விட குறைவாக இருப்பவர்கள் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த சோளத்தை சாப்பிட்டு ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)