பனங்கிழங்கிலும் ஓரளவு ஸ்டார்ச் இருப்பதால், அதை சாப்பிடும்போது சிலருக்கு வாயுத் தொல்லை ஏற்படும். சிலருக்கு உடலில் பித்தத் தன்மை அதிகரிக்கும்.
அவர்கள் பனங்கிழங்கை சாப்பிடும் போது கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
பனங்கிழங்கு சாப்பிடும் போது வாயுத் தொல்லையால் அவதிப்படுகிறவர்கள்
பனங்கிழங்கு வேக வைக்கும் போது அவற்றுடன் பூண்டையும் சேர்த்து சமைத்து சாப்பிடுங்கள்.
உடலில் பித்தம் அதிகமாகாமல் இருக்க வேண்டுமென்றால், பனங்கிழங்குடன் மிளகு சேர்த்து சாப்பிட வேண்டும்.
கட்டி முடிக்கப்படாத வீட்டுக்கு இன்சூரன்ஸ் தேவையா?
பனங்கிழங்கு பொடி
பனங்கிழங்கை லேசாக உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு வெயிலில் காய வைத்து வற்றலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வற்றலை நன்கு இடித்து, அதனுடன் பனை வெல்லத்தையும் சேர்த்து இடித்துப் பொடி செய்து,
அதை சலித்து எடுத்து டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பனங்கிழங்கு பொடி தயார். இதை தினமும் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வர உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.
3 மாதம் ஸ்கெட்ச் 26 இடங்களில் வெட்டு - கிக் பாக்ஸர் வீழ்ந்த கதை !
இரும்புச்சத்து பற்றாக்குறை இருப்பவர்கள் இதை செய்து வரலாம். ரத்த சோகையும் நீங்கும்.