வீட்டில் தான் எலி தொல்லை என்றால் நமது தோட்டத்திலும் இந்த எலி தொல்லை தாங்க முடியாத அளவிற்கு இருக்கும்.
நாமும் என்ன என்னமோ செய்து பார்ப்போம். ஆனால் எலித்தொல்லை மட்டும் தீரவே தீராது.
அதை எப்படி விரட்டுவது என்று மண்டையை பிய்த்துக் கொண்டு இருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு.
ரொம்ப ரொம்ப ஈஸியா எலியை ஓட ஓட விரட்டலாம். அதுக்கு என்ன எல்லாம் பண்ணனும்? அப்படின்னு இந்த பதிவின் மூலம் இப்போ பார்த்திடலாம்.
தோட்டத்தில் மூஞ்செலி, சின்ன எலி, பெருச்சாளி என்று எந்த வகையான எலியாக இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க ஓடியே போயிடும்.
இளம் பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ்... நீ ரொம்ப அழகா இருக்கே !
எலிக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு வாசனை என்றால் அது புதினா வாசம். தோட்டத்தில் இருக்கும் எலிகளுக்கு புதினாவின் வாசத்தை வரவழைத்தால் போதும். ஒரு எலி கூட அந்த பக்கம் சுத்தாது.
புதினாவை நடவு செய்வது மிகவும் சுலபம். ஒரு சின்ன தொட்டியில் மண்ணை போட்டு வீட்டுக்கு வாங்கிய புதினா இலையில் இருந்து சில காம்புகளை மட்டும் எடுத்து வந்து நேராக நட்டு வச்சா போதும்.
கொஞ்ச நாளிலேயே துளிர்த்து புதினா இலைகள் முளைக்க ஆரம்பித்து விடும்.
பாதம் மற்றும் உள்ளங்கையில் கூச்ச உணர்வை தடுக்கும் சில வழிகள் !
அந்தத் தொட்டியை தோட்டத்தில் கொண்டு போய் வைத்தாலே போதும். எலிகள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விடும். அட நீங்க வேற! அந்த புதினா இலையை சாப்பிட்டு ஜம்முனு எலி சுத்திட்டு தான் இருக்கு என்று சொல்பவர்களானால்.
அந்த மாதிரி எலிக்கு, அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க. கை நிறைய ரச கற்பூரத்தை எடுத்துக்கோங்க.
இதை கட்டி கற்பூரம் என்றும் கூறுவார்கள். எங்கெங்கே எலிகள் நடமாடும் என்று உங்களுக்கு தெரியும் அல்லவா? அந்த இடத்தில் எல்லாம் ஒன்னு ஒன்னு போட்டு விடுங்க.
புதினா வாசமும், ரசக்கற்பூர வாசமும் சேர்ந்து வரும் பொழுது எலிகள் மூச்சு விட முடியாமல் அந்த இடத்திலிருந்து ஓடியே போய் விடும்.
இதனால் எலிக்கு எந்த பாதிப்பும் உண்டாகாது. நமக்கு பிரச்சனை தீர்ந்து விடும். இதையும் ட்ரை பண்ணி ஒரு பிரயோஜனமும் இல்லை என்று நினைத்தால் கடைசியாக இதை ட்ரை பண்ணி பாருங்கள்.
இது மிகவும் ஆபத்தான ஒரு விஷயமாக எலிக்கு இருக்கும். இதை செய்வதால் எலியின் உயிர் பறிபோகும். பரவாயில்லை என்பவர்கள் இதை தாராளமாக முயற்சி செய்யலாம். வேண்டாம் எலி பாவம், எலியும் ஒரு உயிர் தானே.
அதை எப்படி சாகடிப்பது? என நினைப்பவர்கள் இதை செய்ய வேண்டாம். உங்களுக்கு வேறு ஒரு ஆலோசனை உள்ளது.
600 ஆண்டுகள் பழமையான கயிற்று பாலம் !
அதுவும் கிட்டத்தட்ட எலிக்கு ஆபத்து தான் ஆனால் அதனால் எலி சாகாது. எலி சாகாமல் எலியை விரட்டுவதற்கு தக்காளி பழத்தை பாதியாக வெட்டிக் கொள்ளுங்கள்.
அதில் மிளகுத் தூளை தடவிக் கொள்ளுங்கள். எங்கெங்கு எலிகள் நடமாட்டம் இருக்கிறதோ, அங்கெல்லாம் வைத்து விடுங்கள். இதை சாப்பிடும் எலிக்கு மூச்சு திணறல் உண்டாகும்.
ஒரு அளவிற்கு மேல் எலியால் நகர முடியாமல் எங்காவது வழிதவறி சென்று விடும்.
அதற்கு மீண்டும் உங்கள் வீட்டிற்கு வர வழி தெரியாது. எலியை கொன்றாலும் பரவாயில்லை, எலி தொல்லை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள், வெல்லத்தை பாகு காய்ச்சிக் கொள்ளுங்கள்.
கால் டம்ளர் இருந்தால் போதும். வெல்லம் இல்லை என்றால் சர்க்கரை பாகு காய்ச்சிக் கொள்ளுங்கள்.
நம்மை தேடி வரும் உணவும் சந்தேகமும் !
கால் டம்ளர் இந்தப் பாகை கெட்டியான பதத்தில் எடுத்துக் கொண்டு அதில் தர்மாக்கோல் குட்டி குட்டி துண்டுகளாக வெட்டி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
தெர்மாகோல் முழுவதுமாக நனைந்த பின் அதை எலிகள் வரும் இடங்களில் வைத்து விடுங்கள். எலிக்கு அதன் இனிப்பு சுவையில் தலைகால் புரியாமல் தெர்மாகோலையும் சேர்த்து தின்று விடும்.
தெர்மாகோல் சாப்பிட்ட எலிக்கு அதன் உயிருக்கே ஆபத்து தான். இதனால் எலி நிச்சயம் செத்து விடும். உங்களுக்கு பிரச்சினையும் சுலபமாக தீர்ந்து விடும்.
இதில் ஏதாவது ஒன்றை முயற்சி செய்து பாருங்கள். அப்பறம் ஒரு எலி கூட உங்கள் கண்ணில் படவே படாது.
மறக்கபட்டு வரும் நட்சத்திர உழைப்பாளி !
தோட்டத்தில் மட்டுமல்ல, வீட்டிலும் இது போல் செய்யலாம். ஆனால் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இதை செய்யுங்கள்.