சுவையான வாழைத்தண்டு கொத்தமல்லி சூப் செய்வது எப்படி?





சுவையான வாழைத்தண்டு கொத்தமல்லி சூப் செய்வது எப்படி?

0

வாழைத்தண்டை சமைத்து சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதை ஜூஸாக எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதை நன்கு அரைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். 

சுவையான வாழைத்தண்டு கொத்தமல்லி சூப் செய்வது எப்படி?
இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடிக்கலாம். உயர் இரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்ற பல பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், மலச்சிக்கல், அசிடிட்டி, அஜீரணம் போன்ற செரிமானம் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடவும் வாழைத்தண்டை உணவு சேர்த்துக் கொள்ளலாம். 

இது நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனைக்கு சிறந்த பலன்களை கொடுக்கும். வாழைத்தண்டில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றன.

வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். 

வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்.

நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது. 

சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும்.

மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும். சரி இனி வாழைத்தண்டு கொண்டு சுவையான வாழைத்தண்டு கொத்தமல்லி சூப் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள் :

வாழைத்தண்டு - 1 துண்டு

கொத்தமல்லி - 1/2 கட்டு

மிளகுத்தூள் - 1 ஸ்பூன்

சீரகத்தூள் - 1 ஸ்பூன்

உப்பு  - தேவைக்கேற்ப

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்தவருக்கு கிடைத்த தெரியுமா? 

செய்முறை :

சுவையான வாழைத்தண்டு கொத்தமல்லி சூப் செய்வது எப்படி?

முதலில் வாழைத் தண்டையும், கொத்த மல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.

உடலில் மிகவும் அழுக்கான இடம் தெரியுமா?

வடிகட்டியதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும். சுவையான வாழைத்தண்டு கொத்தமல்லி சூப் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)