வெண்டைக்காய் ஊட்டசத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்று. வெண்டைக்காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு.
சில வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும்.
நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும் போது ருசி குறைந்து விடும்
உறவின் போது ஆண்களுக்கு வெறுப்பை தரும் பெண்களின் இந்த செயல்கள் !
இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால் தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.
வெளிநாடுகளில் இப்படியாக சாப்பிடுகிறார்கள்.
வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள்.
வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.
இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு வருகிறார்கள்.
வெண்டைக்காயை ஊற வைத்த நீரை பருகுதலும் நன்மைகள் உண்டு.
இரவில படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும்.
இப்படி தினமும் குடித்து வந்தால், அதனால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்.
குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?
ஆகவே வெண்டைக்காயை முழுவதும் வேக வைக்காமல் சிறிது பிசு பிசு தன்மையோடு சமைத்து சாப்பிடுவது நல்லது.
இங்குள்ள உணவகங்களில் இப்படியாக சாப்பிட்டதுண்டு. சிறுவயதில் மிருதுவான வெண்டைக்காயை பச்சையாக சாப்பிட்ட அனுபவமும் உண்டு.
அன்றாட உணவு முறைகளில் ஊட்டச்சத்து நிறைந்த வெண்டைக்காயை சேர்த்துக் கொள்வோம். முதலில் அப்படியே பச்சையாக சாப்பிடலாம்.
இல்லை என்றால் அதை முதலில் கழுவி பிறகு ஒரு சுத்தமான துணியால் துடைத்து விட்டு பிறகு நறுக்கிய வெண்டைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டாலும் சத்து போகாது.
இண்டக்சன் ஸ்டவ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?
வெண்டைக்காயை பொருத்தவரையில் முதலில் கழுவி பிறகு குழம்பு செய்து கூட சாப்பிடலாம்.சத்து போகாது.
நறுக்கி பிறகு கழுவினால் சத்து போய் விடும். அது தான் விஷயம். மேலும் மிகவும் அதிகமாக வதக்க கூடாது.