உருளைக்கிழங்கில் தாது உப்புகளும் வைட்டமின்களும் அதிகமாக உள்ளது. வாழை பழத்தில் இருப்பதை போன்று பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது.
குப்புற படுத்து தூங்குவது தவறா தெரியுமா?
இறைச்சியில் காணப்படும் அனைத்து ஊட்டசத்துக்களும் பச்சை பட்டாணியில் உள்ளது.
உயர் இரத்தழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பு அளித்து சுறுசுறுப்புடனும், இளமையோடும் வாழ உதவி செய்கிறது.
விட்டமின் ஏ உள்ளதால் கண்பார்வை தெளிவிற்கும், கண் பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது.
வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது.
சரி இனி உருளைகிழங்கு பட்டாணி கொண்டு சுவையான உருளைகிழங்கு பட்டாணி மசாலா செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தீக்காயங்களை கணக்கிடுவது எப்படி?
தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு - 1/4 கிலோ
பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - 1 பெரிய அளவு
தக்காளி - 2
குழம்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு.
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
கறி மசால் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கடலை எண்ணெய் - ஒரு குழி கரண்டி
உலகம் அழிய இது நடந்தால் சர்வ நாசம் தான் !
செய்முறை:
பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் வதங்கிய பின்னர், இஞ்சி சிறிதளவு, பூண்டு ஐந்தாறு பற்கள் இரண்டையும் தட்டி போட்டுக் கொள்ளவும்.
மண்டை ஓடு குவியலால் கட்டப்பட்ட கோபுரம்... மாயன் நரபலியா?
இஞ்சி பூண்டு பற்களை சேர்க்காமலும் செய்யலாம். பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளியை போட்டுக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை தொக்கு பதத்திற்கு வதக்கி கொள்ளவும். தக்காளி விரைவாக வதங்கிட சிறிதளவு உப்புத்தூள் சேர்த்து கொள்ளவும்.
மூடியிட்டு சிறிது நேரம் வதங்கிட விடவும்.
தக்காளி வதங்கிய பின்னர், குழம்பு மிளகாய் தூள் இரண்டு டீஸ்பூன், கறிமசால் தூள் அரை டீஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி கொள்ளவும்.
சாதாரண தண்ணீருக்குப் பதிலாக பச்சை பட்டாணி வேக வைத்த தண்ணீரை ஊட்டச்சத்துக்கள் வீணாகாத வண்ணம் சேர்த்து கொள்ளலாம்.
பச்சை பட்டாணியை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விடவும்.
அனீமியா என்றால் என்ன?
பச்சை பட்டாணி மற்றும் உருளைகிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து தனித்தனியாக வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
உருளை கிழங்கின் மேல்தோலூரித்து மசித்து கொள்ளவும். தக்காளி வதங்கி தொக்கு பதத்திற்கு வந்ததும், அடுப்பை நிறுத்தி விடலாம்.
இப்பொழுது வேக வைத்து, மசித்த உருளைகிழங்கு, பட்டாணி இவற்றை சேர்த்து கிளறி கொள்ளவும்.
ரொம்பவும் அழுத்தி, நிறையதரம் கிளற வேண்டாம். ஓரளவு கிளறி, மசாலாக்கள் உருளைகிழங்கின் அனைத்து பக்கங்களிலும் சேரும் வண்ணம் கிளறி விடுங்கள்.
குறிப்பு :
பூரி, சப்பாத்திக்கும் உருளைகிழங்கு பட்டாணி மசாலாக்கு துணை உணவாக வைக்கலாம்.
தயிர் சாதம், சாம்பார் சாததிற்கு பொருத்தமாக இருக்கும். சாப்பாத்தியினுள் வைத்து ரோல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.