சுவையான செலரி தொக்கு செய்வது எப்படி?





சுவையான செலரி தொக்கு செய்வது எப்படி?

0

பலருக்கும் செலரி பற்றி தெரியாது. அது மட்டுமின்றி, இதன் சுவையும் அனைவருக்கும் பிடிக்காது. செலரி என்பது ஒரு காய்கறி. 

சுவையான செலரி தொக்கு செய்வது எப்படி?
இதில் ஏராளமான அளவில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நன்மை விளைவிக்கும் நொதிகள், வைட்டமின்கள் மற்றும் 

கனிமச் சத்துக்களான வைட்டமின் கே, வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அடங்கியுள்ளது. 

தூங்கி எழும் போது பேக் பெயின் இருக்கா? – காரணம் இது தான் !

செலரியில் டயட்டரி நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இதனை ஒரு கப் தினமும் சாப்பிட்டு வந்தால், செரிமானம் மேம்படுவதோடு, உடல் எடையும் குறையும். 

மேலும் செலரியில் நீர்ச்சத்து மற்றும் எலக்ரோலைட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடல் வறட்சியைத் தடுக்கும். சரி, இனி செலரி கொண்டு சுவையான செலரி தொக்கு செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

எப்போது பால் குடிக்கலாம் காலையா? இரவா?

தேவையான பொருள் : 

செலரி - 100 கிராம்,

வெந்தயம் - கால் டீஸ்பூன்,

கொத்தமல்லி - கால் கட்டு,

பூண்டு - 3 - 4 பல்,

கெட்டியான புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்,

பெருங்காயம் - கால் டீஸ்பூன்,

இஞ்சி - 1 துண்டு,

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2,

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்.எண்ணெய்,

உப்பு - தேவைக்கேற்ப,

கடுகு - தாளிப்பதற்கு,

ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, இதோட சேர்த்து சாப்பிடுங்க !

செய்முறை:- 

சுவையான செலரி தொக்கு செய்வது எப்படி?

அகலமான கடாயில் எண்ணெய் விட்டு, அலசி, ஆய்ந்து, நறுக்கிய செலரி மற்றும் கொத்தமல்லி சேர்த்து 7 நிமிடங்களுக்கு வதக்கவும். 

பிறகு ஆற வைக்கவும். இன்னொரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, வெந்தயம், நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

கல்லீரல் பிரச்சனையும் தீர்வும் !

வதக்கிய இரண்டு கலவையையும் அரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்த விழுது, புளிக்கரைசல் சேர்த்துக் கிளறவும். 

உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்க்கவும். சிறு தீயில் வைத்து தொக்கு கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும். 

இந்தத் தொக்கை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)