சுவையான சுரைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?





சுவையான சுரைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?

0

சுரைக்காயில் நீர்ச்சத்து நிறைய இருப்பதால் உடல் சூடு தணிவதற்காக இதனை உணவில் சேர்ப்பது நல்லது. 

சுவையான சுரைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?

உடல் எடையை குறைக்கவும் சுரைக்காய் பெரிதும் பயன்படுகிறது. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். 

சுவையான வாழைக்காய் கட்லெட் செய்வது எப்படி?

கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். 

கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். 

உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.  அத்தகைய காயில் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்...

சுவையான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

சுரைக்காய் - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 1 சிறியது

தயிர் - 1 கப்

வரமிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

தாளிக்க :

கடுகு, கடலைப்பருப்பு, கடலை எண்ணெய்

பொடிக்க :

இஞ்சி - சிறுதுண்டு

பூண்டு - 5

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

நம்முடைய உணவே மருந்து தெரியுமா?

செய்முறை :

சுவையான சுரைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?

முதலில் சுரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். அல்லது துருவிக் கொண்டாலும் சரி தான். அதன் பின்னர் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

பொடிக்க கொடுத்த பொருட்களை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். 

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் சுரைக்காயை போட்டு, நன்கு கிளறவும், சூட்டில் சுரைக்காய் லேசாக நீர்விடும். 

அதற்கு பின்னர் தேவையான அளவு தன்ணீர் தெளித்து மூடி வேகவிடவும். உப்பு போட்டு, வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். அடித்த தயிரில் பொடித்த பொருட்களை போட்டு நன்றாக கலக்கவும். 

நிலாவில் செல்பி எடுக்க முடியுமா? தெரியுமா உங்களுக்கு?

அடுத்து அதில் வேக வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கலக்கவும். இப்போது சத்தான சுரைக்காய் தயிர் பச்சடி ரெடி. இந்த பச்சடியை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)