பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்து விட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக் கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும். காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது.
கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கு ஏற்பட்ட சோகம் !
வெண் பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்த சுத்தியாகும்.
ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். சரி இனி பூசணிக்காய் கொண்டு சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
விதைப்பை வலிக்கிறதா? சுருங்கியும் இருக்கிறதா? இதை படிங்க !
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு,வெங்காய வடகம் - 6 துண்டு,
சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்துக் கொள்ளவும்),
மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன்,
வெல்லம் - ஒரு சிறு துண்டு,மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
பூண்டு - 6 பல் (தோலுரித்துக் கொள்ளவும்),
தக்காளி - 1 (நறுக்கியது),
மஞ்சள் பூசணிக்காய் - 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது),
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
தண்ணீர் - தேவையான அளவு,
கொரோனா வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காய வடகத்தைப் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.
பின்னர் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 1-2 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளி மற்றும் பூசணிக்காயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி கிளறி விட வேண்டும்.
உயிருடன் எலிகளை சாஸில் தோய்த்து சாப்பிடும் சீன இளைஞர் !
பிறகு அதில் புளி நீர் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி 10 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு தயார்.