தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது.
எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.
தனியா பிரியாணி செய்வது எப்படி?
எள்ளு விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும். மாமிச உணவு சாப்பிடாதவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவது நல்ல பலத்தை தரும். எள்ளுருண்டையில் துத்தநாக சத்தும், இரும்பு சத்தும் இருக்கிறது.
மாலை வேளையில் சற்று சூடாக, புளிப்பாக, காரமாக சாப்பிட அட்டகாசமான ஒரு மஞ்சூரியனை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.
இந்த பன்னீர் மஞ்சூரியன் சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு எள்ளு பன்னீர் மஞ்சூரியன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.
காலிபிளவவர் ரோஸ்ட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப்வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலாதாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள்ளு - 2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
திணை கருப்பட்டி பொங்கல்திணை கருப்பட்டி பொங்கல்
தக்காளி சாஸ் - 1/2 கப்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
சிவப்பு வர மிளகாய் பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன் (4 காஷ்மீரி மிளகாய்/வர மிளகாயை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்)
சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி... இதயத்துக்கு நல்லது... ஆய்வில் தகவல் !
செய்முறை:
முதலில் பன்னீரை சதுர துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அத்துடன் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, வாணலியில் போட்டு பொன்னிறமாக வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பிறகு மிளகாய் பேஸ்ட், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி, 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி, பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
எளிமையான கணவாய் மீன் கிரேவி செய்வது எப்படி?
பின்னர் பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைத்து, பின் அதன் மேல் எள்ளு விதைகளைத் தூவி இறக்கினால், சுவையான எள்ளு பன்னீர் மஞ்சூரியன் தயார்.